தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற விவாதத்தை தனியார் தொலைக்காட்சி நடத்தியது, இந்த விவாதத்தில் திமுக சார்பில் சரவணன், வலதுசாரி நித்தியானந்தம், பத்திரிகையாளர் ஸ்ரீராம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் நெறியாளராக தம்பி தமிழரசன் இருந்தார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு இன்று இந்து மதத்தில் இருந்து அம்பேத்கர் வெளியேறிய நாள் எங்களின் புனித நாள் என நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் பேசினார், அத்துடன் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என குற்றவாளி H ராஜாவை வைத்து கொண்டு புகார் அளிக்கிறார்கள் என ஏளனம் செய்தார்.
அதோடு மோடி 2000 இஸ்லாமியர்களை கொன்றவர் என குறிப்பிட்டார் இதற்கு வலதுசாரி நிதியானந்தம் கடும் எதிர்ப்பு தெரிவிக்க எனது நேரத்தை நீங்கள் திருடாதீர்கள் என ஆணவமாக பேசினார், அத்துடன் இன்னும் பல நிகழ்ச்சியின் கருத்திற்கு பொருத்தம் இல்லாத கருத்தை பேசினார் வன்னியரசு, இதையடுத்து தான் மிக பெரிய பதிலடி கிடைத்தது உண்மையில் இப்படி ஒரு சம்பவத்தை எதிர்பார்த்து இருக்கமாட்டார் வன்னியரசு.
தொலைக்காட்சியை பார்த்து கொண்டுஇருக்கும் வாசகர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை,விஜய தசமி நலவாழ்த்துக்கள் என தெரிவித்தார், இந்து மதத்தில் இருந்து வெளியேறிய நாள் என வன்னியரசு தெரிவித்ததற்கு முதல் பாலே சிக்ஸராக பதிலடி கிடைத்தது, அத்துடன் நிகழ்ச்சிக்கு பொருத்தம் இல்லாத தலைப்பில் பலர் பேசினர் எனவே நானும் பேச வேண்டி இருக்கிறது, கண்ணகி முருகேசன் ஆணவ கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது இந்த வழக்கில் தொடக்கம் முதல் வாதாடிய வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் திருமாவளவன் இந்த வழக்கை முடித்து வைக்க பேரம் பேசினார் எனவும் கட்டப்பஞ்சாயத்து செய்தார் என தான் வெளிப்படையாக ரத்தினம் தெரிவித்துள்ளார் இவர்கள் மோடியை பற்றி பேசுகிறார்கள் என ஒரே போடாக போட்டார்.
அவ்வளவுதான் ஐயோ அதை பேசாதீர்கள் என வன்னியரசு கதறிவிட்டார், (இப்போது வன்னியரசு ஸ்ரீராமின் நேரத்தை திருடியது குறிப்பிடத்தக்கது ) நீங்கள் சம்பந்தம் இல்லாமல் மோடியை பேசலாம் நாங்கள் உங்கள் தலைவரை பேசக்கூடாதா என ஒரே போடாக போட்டார் அவ்வளவுதான் ஆடி போய்விட்டார் வன்னியரசு. அவரது பாணியிலேயே திருமாவளவன் மற்றும் வன்னியரசை டார் டாராக கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீராம் பேச்சு இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
மொத்தத்தில் கடந்த சில வாரங்களாக பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் விவாத நிகழ்ச்சியில் படு அடி வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.