பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ் மீண்டும் தமிழக பணிக்கு திரும்புகிறார். தமிழக அரசு கேட்டுக்கொண்டதின் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஒன்றிய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகப் பணிக்கு மீண்டும் திரும்புகிறார் அமுதா.தற்போது பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார்.
மதுரையைச் சேர்ந்த அமுதா பெரியசாமி இளங்கலை விவசாய அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர். 1994ஆம் ஆண்டு தமிழக ஐ.ஏ.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவர், கடந்த 27 வருடங்களாக பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து திறம்படச் செயல்பட்டு வருபவர்.தமிழகத்தின் முதல் பெண் தொழிலாளர் நல ஆணையர், கபடி விளையாட்டில் மூன்றுமுறை தேசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர் அமுதா பெரியசாமி.
அமுதா ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, செங்கல்பட்டில் மணல் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்றபோது, மணல் ஏற்றிவந்த லாரி அவரை இடித்துக் கீழே தள்ளிவிட்டுச் சென்றது. ஆனாலும், பின்வாங்காமல் தொடர்ந்து அந்தப் பகுதியில் மணல் கொள்ளை நடைபெறாமல் தடுத்தார்.
என்ற பல்வேறு நற்பெயர்களுக்கு சொந்த காரரான அமுதா IAS தமிழகத்திற்கு திரும்ப உள்ளது அதிகார பூர்வமாக உறுதி செய்யபட்டுள்ளது. இதில் திமுகவின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு 1988 பேட்ச் IAS அதிகாரி இவரின் பதவிக்கலாம் வருகின்ற 2023 செப்டம்பர் மாதம் 30 ம் தேதி முடிவடைகிறது, இந்நிலையில் அடுத்த தலைமை செயலாளராக அமுதா IAS நியமிக்க படலாம் எனவும் 2024 ம் ஆண்டு நாடு முழுவதும் பொது தேர்தல் நடைபெறும் நேரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக அமுதா IAS செயல்படுவார் என்று திமுக தரப்பு நினைப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.
மேலும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து கழட்டி விட திமுக காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஒடிஷா முதல்வர் நவீன் பட்டனாயக் வழியில் ஆட்சியை சுமுகமாக நடத்த முடிவு எடுத்து இருக்கிறதாம் திமுக தரப்பு, இதனால் தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகள் மூலம் காய் நாகர்தலை தொடங்கி இருக்கிறதாம் திமுக.
ஆனால் மற்றொரு தகவலோ நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் உளவு கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியாக IAS அதிகாரிகள்,IPS அதிகாரிகளை வலுவாக நியமிக்க கடந்த 11 மாதங்களாக மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது அதில் குறிப்பாக இலங்கை எல்லையை ஒட்டி இருப்பதால் தமிழகத்தில் சீனாவின் அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசிற்கு நெருக்கமான முறையில் செயல்படும் அதிகாரிகளை மாநில பணிக்கு மாற்றி மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாகவும் அதற்கான முன்னேற்பாடுதான் அமுதா IAS பிரதமர் அலுவலக உயர் பதவியில் இருந்து தமிழக அரசு பணிக்கு திரும்புகிறார் என்ற தகவலும் பேசு பொருளாக இருக்கிறது.