Politics

லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிய குசும்புக்கார இ ஸ்ரேல் !!

லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிய குசும்புக்கார இ ஸ்ரேல் !!
லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிய குசும்புக்கார இ ஸ்ரேல் !!

வெள்ளிக்கிழமை, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஹமாஸ் பயங்கரவாதிகளை காசாவிற்குள் ஒரு வலையில் சிக்கவைக்க உலகளாவிய ஊடகங்களைப் பயன்படுத்தி ஒரு அதிர்ச்சியூட்டும் தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது அன்றைய நாளின் மாலை நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தினம் உள்ளே நுழைவதாக செய்தி சொல்லப்பட்டது.


சுருக்கமாக சொல்ல போனால் இஸ்ரேல் குசும்பு… ஊடகங்கள் கடுப்ஸ்… "காஸா பயங்கரவாதி ஹமாஸ் கூட்டத்தை முடிக்க, வான்வெளித் தாக்குதலை விட்டு, தரை வழியே தாக்குதல் நடத்தப்போகிறோம்" என்று ஒரு ட்வீட் போட்டது இஸ்ரேல் டிஃபென்ஸ் ஃபோர்ஸ். 

அதைக் கண்ட சில ஊடகங்கள் - வால்ஸ்டிரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ், அசோசியேட்டட் பிரஸ், அல் ஜசீரா உள்ளிட்டவை - 'பிரேக்கிங்' நியூஸ் போட்டு ஹமாஸ் பகுதியவை உஷார் படுத்தியுள்ளன. (தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு எச்சரித்திருக்கலாம். வாய்ப்புண்டு). 

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை நேருக்கு நேர் நின்று  சந்திக்க முடியாத பயங்கரவாதிகள், தப்பித்து ஓடி, 'பதுங்கு சுரங்கங்களில்' ஒழிந்து கொண்டனர். இஸ்ரேல் தரைவழியே வராமல்  130 போர் விமானங்களை களத்தில் இறக்கியது. இவை ஒரே நேரத்தில் அத்தனை பதுங்கு சுரங்கங்களிலும் குண்டு மழை பொழிந்தன. பலர் உயிரிழந்தனர்.

"நீ தரை வழியே வருவதாக தானே சொன்னாய்? ஏன் வான்வெளியே வந்தாய்? எங்களிடம் ஏன் பொய் சொன்னாய்? உன் பேச்சு டூஊஊஊ" என்று ஊடகங்கள் இஸ்ரேலிடம் கோபித்துக் கொண்டன.இஸ்ரேலும், "நாங்கள் போட்ட ட்வீட்டை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை தெளிவாக போடுகிறோம்" என்று சமாளித்திருக்கிறது! இடது பக்கம் இண்டிகேட்டர் போட்டு, வலது பக்கம் கை காட்டி, நேரே போவது போல செய்துவிட்டது.

வழக்கமாக ஊடகங்கள் தான் அரசாங்கங்களை பயன்படுத்தி கொள்ளும் என்ற பேச்சு பலகாலமாக இருக்க, ஊடகங்கள் மூலம் ஹமாஸ் குழுக்களின் கவனத்தை திருப்பி, அனைத்து ஹமாஸ் குழுக்களையும் ஒரே இடத்தில் திரட்டி, பாதாள சுரங்கம் வழியே வெளிவரவைத்து, அந்த இடத்தை நேரடியாக போர் விமானம் மூலம் சரியாக தாக்கி பலரை அழித்துள்ளது இஸ்ரேல், சுற்றி நான்கு புறமும் இஸ்ரேல் நாட்டிற்கு எதிரிகள் இருந்தாலும் அவற்றை கடந்து தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை இஸ்ரேல் அழித்து வருவது சர்வதேச மக்களின் கவனத்தை பெற்றுள்ளது.

ஐநா சபை தலையிட்டு போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபடும் முன்பு பாலஸ் தீனத்தில் உள்ள, ஹாமஸ் குழுக்களை முழுமையாக இஸ்ரேல் அழித்துவிடும் என்றும், இஸ்ரேல் தரைப்படை களத்தில் இறங்க தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.