Tamilnadu

பாஜக அழைப்பு மத்திய அமைச்சர் பதவி என கலர் கலராக ரீல் சுத்திய செந்திலுக்கு ஆப்பு !

tamilkelvi senthil
tamilkelvi senthil

திருமாவளவன் சுய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் செய்தி நிறுவனம் மீது குற்றம் சுமத்தியது, அரசியல் கட்சி தலைவர்களை ஒருமையில் விமர்சனம் செய்தது, தன்னை 100% தீவிர திமுக விசிக ஆதரவாளராக வெளிப்படையாக காட்டி கொண்டது உள்ளிட்ட காரணங்களால் தற்போது இடைக்காலமாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்த பணியை விட்டு வெளியேற்றபட இருப்பதாக கூறப்படுகிறது.


திருமாவளவன் பிறந்தநாளை எழுச்சி தமிழர் நாள் என கொண்டாட அக்கட்சி முடிவு செய்தது இதில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர், இந்த சூழலில் தனியார் செய்தி நிறுவனத்தில் பகுதி நேர பணியில் இருக்கும் செந்தில் கலந்து கொண்டார், அங்கு திருமாவளவனை கவிழ்க்க பாஜக வரிசையில் நின்றதாகவும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தொடங்கி,மாநிலங்களவை உறுப்பினர் கோடி கோடியாய் பணம் கொடுக்க பேரம் பேசப்பட்டது தனக்கு தெரியும் எனவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் செந்தில் கூறினார்.

மேலும் சீமான் உள்ளிட்ட பலரை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசினார், அத்துடன் முழுக்க முழுக்க ஊடகவியலாளர் என்பதை மறந்து திமுக ஆதரவாளராக தன்னை காட்டி கொள்ள பலரை ஒருமையில் விமர்சனம் செய்த செந்திலின் வீடியோ காட்சி கடும் அதிருப்தியை ஊடகவியாளர்கள் மத்தியிலேயே உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் செந்தில் குறித்து பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட செய்தி தொலைக்காட்சிக்கு அவரது பேட்டியை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர் முழுக்க முழுக்க கட்சி நபராக காட்டி கொண்ட நபரை பணியில் வைத்திருப்பது சரியா எனவும், கேள்வி எழுப்புகின்றனர், இந்த சூழலில் பாஜக திருமாவளவனிடம் பேரம் பேசியதாக செந்தில் கூறியதை பாஜகவினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

எந்த வித ஆதாரங்களின் அடிப்படையில் செந்தில் பேசுகிறார், மூன்றாம் தர பேச்சாளர்களை போன்று செந்தில் பேசுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் உடனடியாக செந்தில் பேசியதற்கு ஆதாரம் கொடுக்கவில்லை என்றால் பின்விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என பாஜக தரப்பில் செந்திலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட ஊடக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது, news18 தமிழ்நாடு ஊடக நிர்வாகம் குறித்து செந்தில் குற்றம் சுமத்தியது ஊடக துறையினர் மத்தியிலும் செந்திலுக்கு எதிர்ப்ப்பை கிளப்பியுள்ளது. செந்தில் பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.