தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்த இந்த படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பெரும் திரை பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கான ஆடியோ லான்ச் இல்லை என கூறியது ரசிகர்களிடம் சோகத்திற் ஏற்படுத்தியது. இதற்கு காரணம் திமுக அரசு தான் என்று ரசிகராக ல்போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது உறுதியான நிலையில் இது போன்ற எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று மாலை லியோ படத்தின் ட்ரைலர் வெளியாகிறது. ஆடியோ லான்ச் இல்லாத வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு இன்று திருவிழா போல கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குஷியில் இருந்தனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, லோகேஷ் இயக்குனர் என்ற விதத்தில் அனைவரும் படத்தினை கான ஆர்வத்தில் உள்ளனர்.
படக்குழுவும் அதே எனெர்ஜியில் இருக்க வேண்டி தினமும் பல்வேறு அப்டேட்களை வழங்கி வந்தது. நேற்று படத்தின் தணிக்கை U/A சான்றை வெளியிட்டது. லோகேஷ் படம் என்றாலே ஆக்சனுக்கு பஞ்சமிருக்காது இவர் எடுத்த அனைத்து படத்திலும் காதல் கட்சி ஏதும் இருக்காது எல்லாம் ஆக்ஷன் நிறைந்ததாகவே இருக்கும் இதனாலேயே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தின் ட்ரைலயர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியிடம் கேட்டபோது "எந்த வகையிலும் எதுக்குமே பிரயோஜனம் இல்லாத படம் தான் லியோ என்று கூறினார்" மேலும், மாஃபியா, கேங்ஸ்டர் என சமூகத்திற்கு முக்கியத்துவம் இல்லாத இந்த லியோ படத்தின் மீது தனக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டுமே அந்தப் படத்தை பார்க்கலாம் என்றும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஏதாவது சுவாரஸ்யமாக டிரெய்லரில் வைத்திருப்பார்கள் என்றும் கூறினார். இந்த பதிவு சமூக தளத்தில் வைரலாக ரசிகர்கள் கடும் கோபத்தில் உங்களுக்கு விஜய் மீது என்ன கோபம் என சரமாரியாக கமெண்டை பதிவிட்டு வருகின்றனர்.
இவரை தொடர்ந்து தமிழில் எந்த ஒரு நல்ல படம் வந்தாலும் அடந்த படத்தின் நல்ல கருத்துக்களை எல்லாம் விட்டு விட்டு, படத்தின் நெகட்டீவ்களை மட்டும் எடுத்து கூறுவார் இவர் வேறு யாரு நம்ம புளூ சட்ட மாறன் தான். பெரிய ஹீரோ படம் முதல் சிறு படம் வரை அனைத்தையும் கழுவி ஊத்துவது தான் இவரது பழக்கம். இவர் படத்திற்கு விமர்சனம் செய்வது போல், ரசிகர்கள் இவரை விமர்சித்து, வம்பிழுத்து கொண்டு தான் இருப்பர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் காவிரி பிரச்சனையை முன் நிறுத்தி எக்ஸ் தளத்தில் நடிகர்களின் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு விமர்சித்தார். அதில் தளபதி விஜயின் தலைவா படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு "தலைவா டைம் டு மியூட்" என்ற வசனத்தை பதிவிட்டிருந்தார். இதனால் பொங்கி எழுந்த அனைத்து ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்தனர். அந்த சம்பவம் முடிவதற்குள் தற்போது லியோ படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜூனின் புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கும் அவர் லோகேஷ் எப்போதுமே போதைப்பொருளை ஊக்குவிக்கிறார். அர்ஜூன், விஜய் மாதிரி நடிகர்கள் இதனால் இளஞர்களிடம் ஏற்படும் பிரச்னையை யோசிக்காமல் காசுக்காக நடிக்கின்றனர் என சாடி இருந்தார். இதனை ரீட்வீட் செய்த சிலர் போஸ்டரை ஷேர் செய்து இருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரசிகர்கள் எருமை மாட்டு மேல் மழை பெய்வது போல் பலமுறை திட்டினாலும் இவர் இப்படித்தான், திருந்தமாட்டார் என்று பதிவிட்டு வருகின்றனர்.