Tamilnadu

போதும்டா சாமி வாடிய முகத்துடன் வெளியே வந்த திருமா கதம் கதம் ஸ்டாலின் !

thirumavalavan and stalin
thirumavalavan and stalin

 சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றுவது தொடர்பாக காவல் துறையினர் தடை விதித்ததால் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார்.பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:


சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்றத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டேன். மோரூரில் சாதியவாத சக்திகள் மற்றும் காவல் துறையினர் தலித் மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பேச முதலமைச்சர் தயாராக இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை சந்தித்து அது குறித்து பேசினோம். 

அனைத்து விவரத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், இதுதொடர்பாக பரிசீலிப்பதாக கூறினார்.பல கட்சிகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் விசிகவின் கொடி ஏன் பறக்க கூடாது என கிராம மக்கள் ஏற்றி சென்றபோது, சாதிய வாத சக்திகளும், காவல் துறையும் தலித் மக்களுக்கு எதிரக வன்முறையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச விருப்பம் தெரிவித்தார். 

அதனால் சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் நடக்க இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டங்கள் கைவிடப்பட்டது.பாமக தரப்பில் இருந்தோ, தலித் அல்லாத மக்களிடம் இருந்தோ கொடி ஏற்ற எதிர்ப்பு இல்லை. பாமக, தேமுதிக, விஜய் ரசிகர் மன்ற பெயர் பலகை போன்றவை அந்த இடத்தில் இருந்தது. அதனாலே விசிகவின் கொடியை ஏற்ற முன்வந்தனர். பல மாவட்டங்களில் பல இடங்களில் காவல் துறையினர் இதுபோன்று தடை செய்கின்றனர்.

வருவாய் துறை அனுமதி பெற வேண்டும். காவல் துறையின் அனுமதி பெற வேண்டும் என வழக்கத்திற்கு மாறாக கூறுகின்றனர். எந்த ஆட்சியாக இருந்தாலும் இது போன்று நடைபெறுவது வழக்கமாக உள்ளது. வன்முறையில் ஈடுபட்ட தலித் அல்லாதவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தவில்லை. தலித் சமூகத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது.சில சமூகத்தினருடன் நெருக்கமாகவும், தள்ளியும் காவல் துறையுனர் இருக்கின்றனர். 

இதனால் திமுகவின் கூட்டணி கட்சியாக இருப்பதால் தோழமையுடன், உரிமையோடு கோரிக்கையை முன்வைத்தேன்.சேலம் மாவட்டம் மோரூரில் விசிக கொடியேற்றும் விவகாரம் தொடர்பாக திட்டமிடப்பட்ட போராட்டங்கள் நடத்த இனி தேவை இருக்காது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.இந்நிலையில் முதல்வர் உடனான ஸ்டாலின் சந்திப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது ,

கொடி ஏற்ற அனுமதி  மறுத்து இருக்கிறார்கள் அடுத்தது எங்கள் கட்சியினரை  110 கீழ் கைது செய்கிறார்கள் , இதை நீங்கள் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் ,இதனை கேட்ட ஸ்டாலின்  அங்கு ஊர் பஞ்சாயத்து எடுத்த முடிவு அது நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன இப்போது நாங்கள் அனுமதியளிப்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் செய்ய முடியாது என தெரிவித்துவிட்டார்.

அடுத்தது நீங்கள் நாம் எல்லாம் போராடி வென்ற ஆட்சி இது , இதை எதிர்த்து நீங்களே போராட்டம் நடத்தலாமா ? என கேட்டுள்ளார் ஸ்டாலின் இதற்கு திருமா தரப்பில் நாங்கள் போராட்டத்தை நிறுத்திவிடுகிறோம் என்ற பதில் கொடுக்கப்பட்டுள்ளது ,மேலும் சட்டம் ஒழுங்கு டிஜிபி உடன் ஆலோசனை செய்து உங்கள் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்கிறோம் என அனுப்பிவைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் .

திமுக அரசின் சட்டம் ஒழுங்கு காவல்துறையின் செயல்பாடு  குறித்து கடுமையான விமர்சனங்களை விசிக கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு முன்வைத்தார் , கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கும் வெட்கம் மானம் உள்ளது எனவும் கடுமையாக விமர்ச்சித்தார் , ஆட்சி மாறினாலும் எங்கள் மீது அடக்குமுறை தொடர்கிறது என பேசியிருந்தார் இந்த தகவல் சுற்றுப்பயணத்தில் உள்ள முதல்வரிடம் தெரிவிக்க அதன் வெளிப்பாடாகவே திருமாவளவன் உடனான சந்திப்பில் ஸ்டாலின் ,திருமாவளவனின் எந்த கோரிக்கைக்கும் உறுதியாக பதில் அளிக்கவில்லை என அறிவாலய வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன . 

சந்திப்பின் இறுதியில் ஆளைவிட்டால்  போதும் சாமி என்ற வாடிய முகத்துடன் வந்தே பேட்டியளித்தார் திருமாவளவன் ,முதல்வர் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது அவரது பேட்டியின் மூலம் வெளிவந்துள்ளது . அடுத்து அமையக்கூடிய ஆட்சி சந்தானத்தை வேரறுக்கும் என திருமா பேசினார் ,ஆனால் இப்போது அவரது கட்சி கொடியை கூட ஊண்ட முடியவில்லை ,ஆனால் பாஜகவோ முருகனை மத்திய அமைச்சர் ஆக்கி மாநில தலைவராக பல இடங்களில் கொடி  ஏற்றவைத்து சாதித்தது என அக்கட்சியினர் விசிக நிலையை பார்த்து பதிலடி கொடுத்து வருகின்றனர் .