திமுகவை சேர்ந்த முன்னாள் மத்தியமைச்சரும் தற்போதைய திமுக மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்க கோரி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விண்ணப்பித்துள்ளது.திமுக தலைவர் ஆ.ராசா மீது 2015 ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது ..,
முறைகேடான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அனுமதி கோரியுள்ளது.கடந்த 2015-ஆம் ஆண்டில், ரூ 28 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக சிபிஐயால் ஆ.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆதாரங்களின்படி, ஆ. ராசாவுக்கு எதிரான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2015-ம் ஆண்டு ஆகஸ்டில் சிபிஐ தமிழ்நாடு மற்றும் டெல்லியின் பல இடங்களில் சோதனைகளை நடத்தியது. சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக 28 கோடி சொத்து சேர்த்ததாக ஆ. ராசா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, இந்நிலையில் தற்போது ஆராசா பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் வழக்கை விசாரணை செய்ய சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
மத்திய அரசும் விரைவில் அனுமதி அளித்து உத்தரவிட இருப்பதாக டெல்லிவட்டாரங்கள் தெரிவிக்கின்றன,2 ஜி வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி மற்றும் பலர் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்தும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகம் (இடி) டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிறப்பு நீதிமன்ற விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்த வழக்கிலும் போதிய ஆதாரத்தை சிபிஐ திரட்டி இருப்பதாகவும், இதில் நிச்சயம் ஆ. ராசா கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது, சமீப காலமாக எந்த முக்கிய நிகழ்விலும் ஆ ராசா கலந்து கொள்ளாமல் அமைதியாக இருப்பது இதற்குத்தானா?