தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை டீல் செய்யும் விதம்தான் இப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது நேற்றைய தினம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பல்வேறு பதிலடியை அண்ணாமலை கொடுத்தார் இதில் தனியார் ஊடகம் மற்றும் அண்ணாமலை இடையே காரசார விவாதம் நடைபெற்றது, வாக்குவாதத்தின்போது பேசிய அண்ணாமலை, ``நீங்கள் கேள்வியை அடையாளப்படுத்திக் கேட்டால், நானும் அடையாளப்படுத்தித்தான் சொல்லுவேன். போடுறதுன்னா போடுங்க, போடாட்டி விட்டுருங்க. போடுறதும் போடாததும் உங்க இஷ்டம்னா, சொல்லுறதும் சொல்லாததும் என் இஷ்டம்.
உங்க கேள்வியில அஜெண்டா இருந்தா, என் பதில்லயும் அஜெண்டா இருக்கும். வேணும்னா பேட்டியைப் போடுங்க, வேண்டாட்டி குப்பையில போடுங்க. நான் இப்படித்தான் பேசுவேன். நான் பேசுனதுல உண்மை இருக்கு, நான் சொன்ன டேட்டாவுல பொய் இருக்குன்னு நீங்க புரூஃப் பண்ணிக் காட்டுங்க. கட்சியினுடைய புரொபகண்டாவ நடத்துறதுக்காக டி.வி சேனலை வெச்சுக்கிட்டு பிரஸ் மீட்டுன்னாலே புரொபகண்டாதான்னு நாலு பேரு சுத்திக்கிட்டு இருக்காங்க. பயந்தெல்லாம் பிரஸ் மீட் பண்ண முடியாது. இப்படித்தான் பேசுவோம்.
எங்க பதில் இப்படித்தான் இருக்கும். எப்ப நேர்மையாக, நாணயமாக தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய பல சேனல்கள் மாறுதோ அன்னைக்கு என் பேச்சு மாறும். நானெல்லாம் அன்பா, பண்பா பேசக்கூடிய ஆள். அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம்தான் இப்படியெல்லாம் மாறியிருக்கு. ஒரு கட்சியைப் பழிக்கணும், பாரதப் பிரதமரைப் பழிக்கணும்னே சில பேர் டி.வி சேனல் நடத்துறாங்க. காலையில இருந்து நைட்டு வரைக்கும் இதுதான் அஜெண்டா. அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு மாநிலஹ் தலைவரா உட்கார முடியாது. மாநிலத் தலைவர் சேரைவிட்டுட்டு விவசாயியா அண்ணாமலை மாறும்போது அன்பா நீங்க கேட்கிறதுக்கெல்லாம், பொறுமையா பதில் சொல்லுவேன் என வெளுத்து எடுத்து விட்டார். இதை பார்த்த அருகில் இருந்த வேறு சில பத்திரிகையாளர்கள் மிரண்டு போய்விட்டனர்.
இதற்கு முன்னர் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை.. புயல் வருது மழை வருது பிரதமர் கொடுக்கிற நிதி அக்கௌன்ட்க்கு வருது என அண்ணாமலை பேசியது மாநாடு படத்தின் வந்தான் சுட்டான் போனான் ரிப்பீட்டு என்ற டயலாக் பாணியில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.