திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் திரைப்படத்திலும் சரி பொது வாழ்விலும் சரி தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யக்கூடியவர் , அந்த வகையில் தற்போது தங்கர் பச்சான் தெரிவித்த கருத்து ஊடகங்களை பற்றியது முதலில் நமக்கு நேர்மையான ஊடகங்கள் தேவை பின்பு நல்ல தலைவர்கள் கிடைத்து கொண்டே இருப்பார்கள் என அவர் பேசியதை குறிப்பிட்டு ,
நான் எழுதியதிலேயே மிகவும் அதிகமாக பகிரப்பட்டது இதுதான். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதினேன். இந்நிலை என்று "மாறுமோ" என வேதனை தெரிவித்துள்ளார் அதாவது தற்போதுவரை நேர்மையான ஊடகங்கள் கிடைக்கவில்லை என்பதே தங்கர்பச்சான் கருத்தாக இருக்கிறது . தமிழகத்தில் பலரும் தற்போதைய முன்னணி ஊடகங்கள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர் .
ஊடகங்கள் என்பது எப்போதும் பொதுமக்கள் பக்கம் இருந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என இருவர் இடத்தில் உள்ள குறைகளை வெளிகொண்டுவந்து மக்களுக்கு நன்மை கிடைக்கவும் உண்மை நிலவரங்கள் தெரியவும் உதவுவதே ஊடகங்களின் முக்கியப்பணி ஆனால் இன்று தமிழகத்தில் குரலற்றவர்களின் குரல் , அறம் என பேசும் பலர் ஆளும் கட்சி பிரமுகர்கள் தவறு செய்தால் மூடி மறைப்பதும் , அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் தவறு செய்தால் அதனை மிக பெரிய விவாத பொருளாக மாற்றி வருகின்றன .
இந்த சூழல் என்று மாறுகிறதோ அன்றே ஊழல் இல்லாத நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவார்கள் என்பதே உண்மை அதையேதான் தங்கர்பச்சான் முதலில் நமக்கு நேர்மையான ஊடகங்கள் தேவை பின்பு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார் . ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கர் பச்சான் போட்ட பதிவை இப்போது அவர் பகிர்ந்து எப்போது இந்த நிலை மாறுமோ என வேதனை தெரியவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
தங்கர் பச்சான் இதற்கு முன்னர் திராவிட ஆட்சியை கிழி கிழி என கிழித்து இருப்பார் அந்த சமூக வலைத்தளங்களில் கடும் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது அதனை பார்க்க கிளிக் செய்யவும் .