Cinema

திராவிடன் ஸ்டாக்குகளுக்கு விழுந்த அடி....! மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி...!

chiranjeevi, mohanlal
chiranjeevi, mohanlal

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு பலத்தை எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் தினம் ஜனவரி 22 அன்றைய தினமே உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழா நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகி அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்புகள் வெளியானதிலிருந்து ராமர் கோவில் குறித்த ஒவ்வொரு அற்புதங்கள் மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்துபவர்களின் விவரங்கள், ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும் புனித தீர்த்தங்கள், நன்கொடைகள் குறித்த அனைத்து தகவல்களும் வெளியாகி வருகிறது. அது மட்டும் இன்றி ராமர் கோவில் எவ்வாறு கட்டப்பட்டு வருகிறது என்னென்ன சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது பற்றியும் செய்திகளில் வெளியாகி வருகிறது. அதன்படி அயோத்தி ராமர் கோவிலில் உள்ள பெரும்பாலான கதவுகள் தங்கம் முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் கிட்டத்தட்ட 100 கிலோ தங்கம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது.


மேலும் மூன்று தலங்களைக் கொண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவில் குழந்தை ராமரை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்ய உள்ளார் என்றும் அதற்காக பிரதமர் விரதம் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் ராமர் கோவிலில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ்கள் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய பிரபலங்களுக்கும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ஹனுமன்தெலுங்கு திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா ஹைதராபாத்தில் நடைபெற்ற பொழுது அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அந்த விழாவில் ராமர் கோவிலின் திறப்பு விழாவையொட்டி ஹனுமன் படத்தின் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அந்த அறிவிப்பை தான் வெளியிடுவதற்கு மிகுந்த பாக்கியம் செய்திருப்பதாகவும் ஒரு அனுமன் திரைப்படத்தில் விற்பனை செய்யப்படும் டிக்கெட் கட்டணத்திலிருந்து ஐந்து ரூபாயை ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இதற்கு அந்த படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த சிரஞ்சீவி ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்பட்டு வருவது வரலாற்றில் ஒரு மயில் கல் என்றும் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவிலும் தான் கலந்து கொள்வதற்கு அழைப்புகள் வந்துள்ளதாகவும் அதனால் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழாவில் குடும்பத்துடன் நான் கலந்து கொள்ள உள்ளேன் என்றும் தெரிவித்தார். இப்படி சிரஞ்சீவி மட்டுமின்றி மற்ற திரையுலகின் முக்கிய பிரபலங்களும் தான் பற்றிக் கொண்டிருக்கும் இந்து சமயம் குறித்தும் ராமரை குறித்தும் ராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா பற்றியும் பரவலாக பிரமித்து பேசி வருகின்றனர். அந்த வரிசையில், மலையாளத் திரை உலகின் பிரபல நடிகரான மோகன்லால் ராமரைக் குறித்து பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மோகன்லால் ராமரை பற்றி மிக உருக்கமாக பாடும் வரிகள் இடம் பெற்றிருந்தது இணையத்தில் வைரலாகிவருகிறது. இப்படி தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்கள் ராமர் கோவில் குறித்தும் ராமரை பற்றியும் எந்த ஒரு வீடியோவும் வெளியிடாத நிலையில் தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் இருந்து ராமர் கோவிலுக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. மேலும் தமிழகத்திலிருந்து ஏன் யாருமே முன்னணி நட்சத்திரங்கள் ராமர் கோவிலுக்காக குரல் எழுப்பவில்லை எனவும் கேள்விகள் எழுந்து வருகிறது.