India

இதுபோல் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் தமிழகத்தில் நடைபெற வேண்டும் அன்றே மாற்றம் !

bihar rishi kumar
bihar rishi kumar

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ரிஷி குமார் ஓராண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகளை நோக்கி  முன்னோக்கி செல்லும் போது சுரங்கம் அருகே தீவிரவாதிகள் வைத்த கண்ணி வெடி விபத்தில் சிக்கி ரிஷி குமார் உயிரிழந்தார்.


இந்த சம்பவம் பீகார் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது, இளைஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் ரிஷி குமார் வீட்டிற்கு படை எடுத்தனர், தங்களை காக்க எல்லைக்கு சென்ற ராணுவ வீரரை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவேண்டும் எனவும் தங்கள் ஆறுதலை தெரிவிக்கவும் ஒன்று கூடினர்.

இராணுவ வீரர் ரிஷி குமார் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க பல ஆயிரம் மக்கள் கூடியது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது, தங்களது உயிரை காக்க எல்லைக்கு போகும் ராணுவ வீரனை இறுதியாக வழியனுப்ப பொது மக்கள் ஒன்று சேர்ந்தது, மற்ற மாநில மக்களும் கற்று கொள்ளவேண்டிய பாடம்,

நாட்டில் சில தற்குறிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய சூழலில் பீகார் மக்கள் தங்கள் மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய காட்சியை பார்த்தாவது மற்ற மாநில மக்களும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த நாட்டு பற்றற்ற நபர்கள் பாடம் கற்று கொள்ளவேண்டும் .

இதுபோல் நம் நாட்டை காக்க உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரனுக்கு இளைஞர்களும்,பொது மக்களும் அரசியல்வாதிகளும் என்று கூடி இறுதி மரியாதை செலுத்துகிறோமோ அன்றே தமிழகத்தில் மாற்றம் உண்டாகும் என வேதனையுடன் பதிவு செய்துள்ளார் சிவநேசன் என்ற இராணுவ வீரரின் தந்தை. to watch video click