Tamilnadu

புகார் கொடுத்தும் பலனில்லை டெல்லியில் சிறப்பான சம்பவம் செய்த பாஜக ! இருக்கு சம்பவம் இருக்கு !

sg surya
sg surya

தமிழக பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் மற்றும் தமிழக கலை கலாச்சார பிரிவு மாநில தலைவர் காயத்ரி ரகுராம் ஆகியோர் தமிழக காவல்துறையில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத சூழலில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர்.


பாஜக பிரமுகர் கல்யாண ராமன் கைது செய்யபட்ட போது எந்த குற்றத்திற்காக கைது செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய பாஜக மாநில செயலாளர் மீது தமிழக காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் சுமதி வெங்கடேசனை அடிக்க பாய்ந்ததாக வீடியோ காட்சி வெளியானது, இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தன்னை தாக்கவந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமதி  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார், இதுவரை அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் மீது திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளத்தில் கடும் ஆபசமாக பதிவிட்டு பாஜக தலைவர்களுடன் ஒன்றாக இணைத்து பதிவிட்டு இருந்தார், இந்த சூழலில் தவறாக பதிவு செய்த நிர்வாகியை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என காயத்ரி ரகுராம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் முகாந்திரம் இருந்தும் தவறாக பதிவு செய்த நபரை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை , தற்போது மீண்டும் சமூகவலைத்தளங்களில் அந்த நபர் அடாவடியாக பேசி வருவதாக கூறப்படுகிறது, இந்த சூழலில்தான் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசிடம் சொல்லி பயன் இல்லை என டெல்லி சென்றுள்ளனர் பாஜக நிர்வாகிகள்.

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் SG.சூர்யா தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டது பின்வருமாறு :-  பா.ஜ.க பெண் தலைவர்களை தொடந்து அவதூறு செய்து வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது தொடந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தமிழக காவல்துறையின் ஒரு சார்பு போக்கு குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் திருமதி.ரேகா ஷர்மா அவர்களிடம் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை அண்ணா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்திரவாதம் அளித்துள்ளார். டெல்லியில் பிரம்பை எடுத்தால் தான் இங்கு தமிழகத்தில் தி.மு.க அரசில் சில நியாயமான விஷயங்களும் நகரும் போல  பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே முரசொலி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் அந்த சம்பவம் கடும் பரபரப்பை உண்டாக்கிய சூழலில் தற்போது தேசியம் மகளிர் ஆணையத்தில் பாஜக புகார் அளித்து இருப்பது என்ன மாற்றத்தை உண்டாக்கும் என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.