நடிகர் மன்சூர் அலிகான் வீடு கடந்த வாரம் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது, அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டியது உறுதியானதை தொடர்ந்து வீட்டிற்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் நேரடியாக சென்ற அதிகாரிகள் வீட்டினை பூட்டி சீல் வைத்தனர், இது ஒருபுறம் இருக்க தற்போது சென்னையில் அடை மழை வெளுத்து வாங்கியதால், மழை நீர் வெளியேற வழியில்லாமல் வீட்டுளுக்குள் புகுந்துள்ளது, கடந்த ஆண்டும் இதே போன்று மழை நீர் தேங்கியது.
அப்போது மன்சூர் அலிகான் பாட்டு பாடி என்ஜாய் செய்துள்ளார், ரகிட ரகிட என பாட்டு பாடி என்ஜாய் செய்துள்ளார், மேலும் புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு விடு என பாட்டு பாடியுள்ளார், ஏற்கனவே ஆட்சியாளர்கள் வித்துவிட்டார்கள் என பாட்டு பாடியுள்ளார், மேலும் வெளிய போக முடியலையே வீட்டு உள்ளே தண்ணீர் வந்துருச்சு என பாட்டு பாடி என்ஜாய் செய்துள்ளார்.
இப்படி பாட்டு பாடி ஊருக்கு அட்வைஸ் செய்த மன்சூர் அலிகானே மழை நீர் செல்லும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்து நீதிமன்றமும் வீட்டினை சீல் வைத்து விட்டது, போன வருடம் புயலுக்கு படகு ஒட்டி பாட்டு பாடி என்ஜாய் செய்த மன்சூர் அலிகான் இந்த முறை அந்த ஏரியாவில் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது.
மன்சூர் அலிகானின் காமெடியை இந்த ஆண்டு மிஸ் செய்வதாக நெட்டிசன்கள் மன்சூர் அலிகானிற்கு ஆதரவாக கமெண்டுகள் பதிவு செய்து வருகின்றனர் அதே நேரத்தில் புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி மழை நீர் தேங்க காரணமாக இருந்துவிட்டு கடந்த ஆண்டு ஊருக்கு எப்படி அட்வைஸ் செய்துள்ளார் பாருங்கள் எனவும் மற்றொரு தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.