Politics

இதுதான் கூட்டணி பலம் என்பது அடிச்சு தூக்கிய அதிமுக வேட்பாளர் பரிதாபத்தில் திமுக!!

இதுதான் கூட்டணி பலம் என்பது அடிச்சு தூக்கிய அதிமுக வேட்பாளர் பரிதாபத்தில் திமுக!!
இதுதான் கூட்டணி பலம் என்பது அடிச்சு தூக்கிய அதிமுக வேட்பாளர் பரிதாபத்தில் திமுக!!

சட்டமன்ற தேர்தல் களம் தொகுதி பங்கீடு முடிந்து வேட்பு மனு தாக்கல் பிரச்சாரம் என சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அதிமுக திமுக கூட்டணிகள் சம பலத்துடன் தேர்தலை எதிர் கொள்வதால் இந்த தேர்தல் இரண்டு அணிக்கும் சாதகமான சூழலாகவும் தொங்கு சட்டமன்றம் அமையவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த சூழலில் வட மாவட்டங்கள் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளன, வன்னியர் சமூகத்திற்கு 10.5  % உள் ஒதுக்கீடு கொடுத்த பின்பு நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் அதிமுக பாமக பாஜக கூட்டணிக்கு சாதகமாக வட மாவட்டங்களில் குறிப்பாக பாமாகவிற்கு சாதகமாக அமையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராணிப்பேட்டை சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என கூட்டணி கட்சிகள் இடையே இப்போதே பல்வேறு கருத்துக்கள் பல்வேறு மட்டத்தில் பரவி கொண்டு இருக்க இராணி பேட்டை சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுகுமாறன் வெற்றி பெறுவார் என தெரியவந்துள்ளது.

திமுக கூட்டணியை காட்டிலும் இங்கு அதிமுக கூட்டணியில் பலம் குறிப்பாக பாமக கூட்டணி அதிமுகவிற்கு பெரிதும் உதவுகின்றது, கடந்த சட்டமன்ற தேர்தலில் 7896 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக எம்எல்ஏ காந்தி அதிமுக வேட்பாளரை வெற்றி பெற்றார், இந்த தேர்தலில் தனித்து களமிறங்கிய பாமக 23850 வாக்குகளும் இவை தவிர்த்து பாஜகவும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் அதிமுக பாமக பாஜக கூட்டணி பலம் திமுகவை காட்டிலும் தொகுதியில் அதிக முக்கியத்துவத்தை பெற்றுள்ளதால் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுகுமாரன் வெற்றி பெறுவார் எனவும் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெரும் என்று கூறப்படுகிறது.