80 மற்றும் 90 களில் காதல் நாயகனாக கொடி கட்டி பறந்த மோகன் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். என்னதான் இவர் கர்நாடகாவை சேர்ந்தவராகவும் கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களால் நல்ல வரவேற்பையும் தமிழ் மக்களிடையே நல்ல ஆதரவையும் பெற்றவர். தனது முதல் நாடகத்தால் பல பாராட்டுகளைப் பெற்ற மோகன், பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா திரைப்படத்தில் கன்னட திரை உலகில் அறிமுகமானார் அந்த படத்தில் தமிழ் நடிகரான கமலஹாசன் உடன் இணைந்து நடித்த மோகன். அதற்குப் பிறகு 1980ல் மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமான முதல் படமே நல்ல ஹிட் அடித்ததோடு தொடர்ச்சியாக மோகன் நடித்த பல படங்களில் நடித்தார். மகேந்திரன் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற திரைப்படத்தில் நடித்த மோகனுக்கு பல தரப்பிலிருந்து விருதுகள் குவிந்தது ஏனென்றால் இந்த படம் ஓராண்டுக்கு மேல் ஓடியது. இதனால் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
மேலும் பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபர் விருதையும், 1986 ஆம் ஆண்டில் மௌனராகம் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றார். இப்படி மோகன் நடித்த பல படங்கள் 100 நாட்களையும் கடந்து ஓடியதால் மோகனை வெள்ளி விழா நாயகன் என்றும் அழைத்து வந்தனர். அதே சமயத்தில் இவருக்கு மைக் மோகன் என்ற பெயரும் உண்டு. ஏனென்றால் இவன் நடித்த பல பாடங்களில் மேடை பாடகராகவும் மைக்கை பிடித்து பாடும் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்று விடும். அதுமட்டுமின்றி மோகன் நடித்த பல திரைப்படங்கள் இன்றளவும் எவர்கிரீன் படங்களாகவே மிளிர்கிறது. தனது சிறப்பான நடிப்பால் அன்றைய டாப் ஹீரோக்கள் லிஸ்டில் முக்கிய இடத்தை பெற்ற மோகனின் இந்த திரைப்பட வெற்றிப் பயணமானது பத்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதற்குப் பிறகு தொடர்ச்சியாக சரிவுகளை சந்தித்த மோகன் ஒரு கட்டத்தில் நடிப்பதே நிறுத்திவிட்டார். அப்படி இவர் சினிமாவில் இருந்து விலகிய சமயத்தில் மோகனுக்கு எய்ட்ஸ் வந்து விட்டதாகவும் இறந்துவிட்டதாகவும் பல வதந்திகள் எழுந்தது. அவற்றிற்கு எந்த ஒரு கருத்தையும் இதுவரை தெரிவிக்காமல் இருந்து வந்த மோகன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது பல வருடங்களுக்குப் பிறகு ஹரா பட பிரமோஷனுக்காக தற்போது பல பேட்டிகளை கொடுத்து வரும் மோகன் தனக்கு எய்ட்ஸ் வந்ததாக எழுந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், 90களில் எனக்கு எய்ட்ஸ் நோய் வந்து விட்டதாகவும் நான் இறந்துவிட்டதாகவும் கூறினார்கள். அந்த செய்தியை கேட்டு எனது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் பதறி அடித்து என்னை காண்பதற்கு வீட்டிற்கு வந்தார்கள். அதோடு என்னை பேட்டி எடுக்க வந்தவர்களும் எய்ட்ஸ் இல்லன்னு சொல்லுங்க சார் என்றனர், அதற்கு நான் இது போங்கா இருக்கே டா சொன்னேன்!! ஏனென்றால் முதலில் நீங்களே இருக்குன்னு சொல்லுவீங்க அதுக்கப்புறம் நான் அதை இல்லைன்னு சொல்லனுமா? என திருப்பி அனுப்பி விட்டேன்! மேலும் என் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் உண்மையைக் கூறினேன். மற்றபடி இது உண்மையாக இருந்தால் தான் நான் ஃபீல் பண்ண முடியும் இது உண்மை இல்லை அதனால எனக்கு எந்த ஃபீலிங் இல்லை என இத்தனை வருடங்களாக எழுந்து வந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மோகன். இந்த செய்தி தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜயின் கோட் திரைப்படத்திலும் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.