Tamilnadu

"ஒத்த ஓட்டு" என கிண்டல் செய்தவர்கள் கவனத்திற்கு பாஜகவில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் !!

Annamalai's announcement - District leaders
Annamalai's announcement - District leaders

தமிழக பாஜகவில் 8 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை அறிவித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார், இதன்படி மதுரை நகர் டாக்டர் சரவணன், திருச்சி நகர் ராஜசேகரன், கரூர் வி. செந்தில்நாதன், பெரம்பலூர் பி.செல்வராஜ், விழுப்புரம் AD.ராஜேந்திரன், செங்கல்பட்டு திரு வேதா சுப்பிரமணியம், கோயமுத்தூர் வடக்கு சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .


கோவையில் கவுன்சிலர் தேர்தலில் ஒத்த ஓட்டு மட்டும்தான் பாஜக வேட்பாளர் வாங்கினார் என ஊடகங்கள் , எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்த நிலையில் கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களை மதிக்க கூடிய இயக்கம் பாஜக , வரும்காலத்தில் சிறப்பாக செயல்பட்டால் ஒத்த ஓட்டு  வாங்கியவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார் .

இந்த சூழலில் எந்த கவுன்சிலர் தேர்தலை வைத்து ஊடகங்கள் எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்ததோ அதே போன்ற கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற சங்கீதா என்ற வார்டு கவுன்சிலரை மாவட்ட தலைவராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அண்ணாமலை , பாஜகவில் மாவட்ட தலைவர் பதவி  என்பது தமிழகத்தில் திமுக அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இணையான பொறுப்பு .

அதிலும் நாட்டை ஆளும் கட்சியின் மாவட்ட தலைவர் பதவி கவுன்சிலருக்கு கிடைப்பதும் அதிலும் பெண்ணிற்கு  கிடைப்பதும் தமிழகத்தில் திராவிட கட்சிகளில் நினைத்தும் பார்த்துவிடாத சம்பவம் 

அந்த மாற்றத்தை அண்ணாமலை செய்துள்ளார் குறிப்பாக பாஜகவிற்கு செல்வாக்கு உள்ள கோவை பகுதியில் மாவட்ட தலைவர் பொறுப்பு பெண் கவுன்சிலருக்கு கொடுத்து ஒத்த ஓட்டு  என கிண்டல் செய்தவர்களை ஒரே அறிவிப்பில் தும்சம் செய்துவிட்டார் அண்ணாமலை .

தற்போது மாவட்ட தலைவர்களாக அறிவிக்கபட்ட சங்கீதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர் . இதற்க்கு முன்னர் அண்ணாமலை மாவட்ட தலைவர்களா எவ்வாறு செயல்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்த சில தகவல் மேலும் உங்களுக்காக : ன்னை மாவட்டத் தலைவர்கள் அடிக்கடி வந்து பார்க்கணும் காலையில் ஒரு குட் மார்னிங், இரவில் ஒரு குட் நைட் சொல்லனும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏன் என்னை வந்து பாக்கல அப்படின்னு நான் உங்களை கேள்வியும் கேட்கப் போறதில்லை ஆனால் மக்களைச் சென்று பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக உங்களைக் கேள்வி கேட்பேன்.

நான் மாநிலம் முழுக்க மக்களைச் சந்திக்கப் போவது போல நீங்க உங்க மாவட்டம் முழுக்க பயணிக்கணும், மக்களைச் சந்திக்கப் போங்க நான் எப்போது உங்களைச் சந்திக்க வேண்டுமோ அந்தநேரமும் காலமும் தேவையும் வரும்போது கண்டிப்பாக ஒன்று நான் உங்கள் இடத்திற்கு வந்து உங்களைச் சந்தித்துப் பேசுவேன் அல்லது உங்களை அழைத்துப் பேசுவேன். இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள்ளாக அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. மூன்றாண்டுகள் நீண்ட காலம் இல்லை அது ஒரு குறுகிய காலக்கெடு.

அதற்குள்ளாக நாம் ஒரு அடையாளத்தை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எனக்கு வேண்டும். நாமெல்லாம் ஒரே டீம் இதில் யாரும் பெரியவங்க, சின்னவங்க அப்படிங்கிற பேதம் கிடையாது. கட்சியைப் பொருத்தவரை நீங்கள் ஒரு பாஜக நிர்வாகி நானும் ஒரு பாஜக நிர்வாகி அவ்வளவே.

ஒவ்வொரு நிர்வாகியிடமும் நான் தனிநபர் தொடர்பைவிட அதிகமான நிர்வாகத் தொடர்பை வளர்த்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் மாவட்டத்தில்/ மண்டலில் / பூத்தில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியை வெற்றிகரமாகச் செய்யுங்கள். ஒவ்வொரு நிர்வாகியும் மாதாந்திரத் தகவல்களை ஆதாரங்களுடன் எனக்கு அனுப்பி வையுங்கள் அது தங்கள் முப்பது நாட்களுக்கான டைரிக் குறிப்பாக இருக்கலாம். சில நாட்கள் கட்சிப்பணி ஆற்றமுடியாத சூழல் இருக்கலாம் தவறில்லை, அன்று தனிப்பட்ட வேலை என அந்த நாளில் குறிப்பிடலாம்.

ஒரு மாநிலத் தலைவராக நான் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகச் செலவிட முழுமுயற்சி செய்கிறேன். நான் அறைக்குள்ளே அமர்ந்து அரசியல் செய்ய விரும்ப வில்லை, மக்களிடத்தில் இருக்க விரும்புறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நபராக இருக்க விரும்புறேன். அதையே நம் மாவட்ட /மண்டல்/பூத் தலைவர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன். என குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது .