பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவிற்கு "ஜெய்பீம்" திரைப்படம் குறித்து 9 கேள்விகளை விளக்கமாக கேட்டு இருந்தார், அந்த கேள்விகளுக்கு பதில் நேரடியாக அளிக்காத சூர்யா தனது தரப்பு விளக்கமாக அறிக்கை ஒன்று வெளியிட்டு தனது செயல் நியாயம் என மேற்கோள் காட்டி இருந்தார்,
அதாவது திரையில் வன்னியர் அடையாளத்தை காட்சி படுத்தியதற்கு எந்தவித வருத்தமோ அல்லது மன்னிப்போ சூர்யா கேட்கவில்லை மாறாக அன்புமணி தவறாக புரிந்து கொண்டார் என நியாய படுத்தி இருந்தார் சூர்யா, இந்த சம்பவம் மீண்டும் நீர் பூத்த நெருப்பாக வெடித்து கொண்டிருக்கும் சூழலில் திரைத்துறையை சேர்ந்தவரும் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம்.,
இந்த முறை "5" கேள்விகளை சூர்யாவை நோக்கி எழுப்பியுள்ளார் அதில் சிலவற்றிற்கு என்ன காரணம் என அவரே குறிப்பிட்டுள்ளார் அவை பின்வருமாறு :- ’மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது' என அன்புமணிக்கு சூர்யா பதில் கொடுத்துள்ளார் - அதே அன்பான மக்கள், ரசிகர்கள், திரைப்படங்களை விரும்புபவர்கள், உங்கள் எல்லா திரைப்படங்களையும் பார்த்து பெரும் ஆதரவை வழங்குபவர்கள் தான் உங்கள் பொய்யைப் பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
அவர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்தார்கள், சாதியைக் குறிவைக்கும் சில பொய்களைத் தவிர அனைத்தையும் விரும்பினார்கள். இது தான் உண்மை.அவர்கள் உங்கள் சாதிக்காக உங்கள் ரசிகர்கள் அல்ல உங்கள் திறமைக்கும் நடிப்புக்கும் உங்கள் ரசிகர்கள். உங்களுக்கு நான் உட்பட எல்லா ஜாதியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் சினிமா துறையில் பெரிய நடிகர் மற்றும் மரியாதைக்குரிய நடிகர் பொய் சொல்வது கருத்து சுதந்திரமாகிவிட்டதா?
ஒரு சாதியை குறிவைப்பது கருத்து சுதந்திரமா? நீங்கள் உண்மைக் கதையை கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் உண்மைகளை கூறலாம் ஆனால் நீங்கள் ஏன் கூறவில்லை?
உங்கள் திரைப்படம் ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தால், ஏன் திரைப்படத்தில் காலண்டரையும் சில விஷயங்களையும் மாற்ற வேண்டும், ஏனென்றால் அது தவறு. இது தவறு இல்லை என்றால் நீங்கள் விளக்க வேண்டியதில்லை.. அல்லது நீங்கள் மக்களால் கேள்வி கேட்கப்பட மாட்டீர்கள்.
உங்கள் விளம்பரத்திற்காக ஒரு குறிப்பிட்ட சாதியை தூண்டுவது சரியல்ல. மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது தவறு. ஒருவரின் பிறப்பு உரிமையை களங்கப்படுத்துவது தவறு. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பது நல்ல எண்ணம். ஆனால் மற்ற சாதி பற்றி பொய் சொல்வது தவறு எனவும் காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.
திரை துறையை சாந்தவர்களிடம் இருந்தே தற்போது சூர்யாவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது வரும் காலங்களில் அவரது திரைப்படங்கள் திரையில் ஓடுமா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.