Tamilnadu

போட்ரா "வெடிய" வைகோ வாய் திறந்து விட்டார் இனி "அண்ணாமலைக்கு" வெற்றிதான் கொண்டாட்டத்தில் இறங்கிய பாஜகவினர் !

annamalai and vaiko
annamalai and vaiko

முல்லை பெரியாறு அணையில் கேரள கம்யூனிஸ்ட் அமைச்சரின் அடாவடி போக்கு மற்றும் அதனை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ குறித்து விமர்சனம் செய்ததுடன் வைகோ யார் பக்கம் நிற்பார் என கேள்வி எழுப்பி இருந்தார், இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமான பதில் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை குறித்து தான் செய்த பல போராட்டங்களை குறிப்பிட்டு இருக்கும் வைகோ..,

இறுதியாக அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார் அதில் பாரதிய ஜனதா கட்சியில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலிஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.

தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு என்றால், பென்னி குயிக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதே நான்தான். கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், முல்லைப் பெரியாறு வழிந்தோடும் பகுதி புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, மஞ்ச மலை, பசுமலை, தேங்கா கல், செங்கறை, உப்புத்துறை, சப்பாரி, ஆலடி, மேரிகுளம் ஆகியவைகளில் சரியாக 48 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணை உள்ளது.

 இந்தத் தூரத்தில் 48 தடுப்பணைகளை கேரளா கட்டிக் கொள்ளலாம். மழைக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 555 அடி உயரத்திலிருந்து, 444 அடியாக 111 அடி நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும். பேபி அணைப் பகுதியில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும். அணைக்கட்டுப் பகுதியில் தமிழ்நாட்டுக்கு மும்முனை மின்சாரம் கேரளா அரசு வழங்க வேண்டும்.

இப்போதுள்ள தமிழ்நாடு அரசின் படகு பல வருடங்களுக்கு முன் செயல்பாட்டுக்கு வந்தது. ஒன்று அணைப் பகுதியிலும் மற்றொன்று தேக்கடியிலும் செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும். வல்லக் கடவு - முல்லைப் பெரியாறு பாதையைச் செப்பனிட தமிழ்நாடு அரசும் திட்டம் வகுக்க வேண்டும். தேனி மாவட்ட ஆட்சியரும், இடுக்கி மாவட்ட ஆட்சியரும் அடிக்கடி கலந்து பேச வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள்.

இந்தப் பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது. என குறிப்பிட்டு இருக்கிறார் இந்த சூழலில் அண்ணாமலையை விமர்சனம் செய்த வைகோவின் செயல்பாட்டை பாஜகவினர் எதிர்ப்பதற்கு மாறாக வெடி வெடித்து வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

 ஈழ பிரச்சனையை பற்றி பேசினால் என்ன 'சிலான்' மேட்டரா என்பார்,திமுகவின் கிளைச் செயலாளருக்கு உள்ள அறிவு கூட ஸ்டாலினுக்கு இல்லை என்று பேசினார், ஆனால் இன்று அவருடைய உயரமென்ன? இவருடைய நிலையென்ன? இதேதான் நாளை அண்ணாமலை விவகாரத்திலும் நடக்கப் போகிறது.

முல்லை பெரியாறு விஷயத்தில் அகரம் தெரியாத அண்ணாமலை சொல்லித்தான் இவர் கேரள அரசையே தற்போது கண்டித்திருக்கிறார்..இந்த நிமிடம் வரை பறிபோன தமிழக உரிமையை பற்றி ஒரு வார்த்தை கூட இவர் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜா சோழன்.

மொத்தத்தில் வைகோ அண்ணாமலை குறித்து விமர்சனம் வைத்துவிட்டார் இனி வெற்றிதான் என பாஜகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.