Cinema

#BREAKING நடிகர் சித்தார்த் ஓட்டம்... விரட்டி விரட்டி ஓடவிட்ட பாஜகவினர் !

Actor siddharth
Actor siddharth

நடிகர் சித்தார்த் பாஜகவினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனது ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு ஓட்டம் எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் சித்தார்த், பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.


தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இன்றி வீட்டில் ஓய்வு எடுத்தும் சமூகவலைத்தளங்கள், கேலிக்கை விடுதிகள், மது கூடங்கள் ஆகியவற்றில் பொழுதை சித்தார்த் போக்கி வருவதாக கூறப்படுகிறது, நடிகரான சித்தார்த் அவ்வப்போது நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டு வருபவர்.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த நிலையில் சித்தார்த் எந்தவித கருத்துக்களையும் விமர்சனங்களையும் செய்யாமல் இருந்தார், மேலும் கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்ற போதும், அனிதா மரணத்தின் போதும் பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தவர் சித்தார்த். தற்போது திமுக ஆட்சியிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

மேலும் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார், இந்நிலையில் அதிமுக ஆட்சியின் போது   அனிதா மரணத்தை விமர்சனம் செய்த எந்த நடிகரும் திமுக அரசாங்கத்தை கேள்வி கேட்கவில்லை, இதுகுறித்து ட்விட்டர் வாசி ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில்  அதற்கு சித்தார்த் கடுமையாக பதில் அளித்தார் அந்த பதிவில் ,நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது.இதையொட்டி, ட்விட்டரில் ஒருவர் நடிகர் சித்தார்த்தை டேக் செய்து நீட் தேர்வு நடந்திருப்பது பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

"மூதேவி. கோவமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன போய் கேளு. நான் என் வேலையத்தாண்டா பாக்கறன். பொறுக்கி பசங்க. இதுவே வேலையா போச்சு. ட்விட்டரை டாய்லெட்டாக்கி வச்சுருக்கீங்க. வேற எங்க மலரும்? சாக்கடையிலதான் மலரும். எழவு.ஹிந்தில சொல்லட்டா?" என பதில் கொடுத்தார்.

இதற்கு ட்விட்டர் வாசிகள் தரப்பில் கொடுத்த பதிலடியில் டேய் நான் கேள்வி எழுப்பி இருக்கேன் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ரத்து என்று சொன்னீர்கள் இப்போது ஏன் நீட் ரத்து செய்யவில்லை என எனக்கு துப்பு இருப்பதால் கேள்வி எழுப்பி இருக்கிறேன் என்னுடையை கேள்வி என்னவென்றால் போன ஆட்சியின் போது குதித்த நீ இப்போது வாயை மூடி ஏன் இருக்கிறாய் அன்று கத்திய நீ இன்று ஏன்டா வாயே திறக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து நெட்டிசன்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களுக்கு பதில் சொல்லமுடியாமல், சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கை கேன்சல் செய்துவிட்டதாகவும், பாய் என்று கூறி கணக்கை மூடிவிட்டு ஓட்டம் எடுத்துள்ளார், நேற்று பெங்களூரில் சித்தார்த் கண்ணத்தில் அறைவிடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் ட்விட்டர் வாசிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து விவகாரம் மோசமாவதை அறிந்த சித்தார்த் தனது ட்விட்டர் கணக்கை மூடிவிட்டு ஓட்டம் எடுத்துள்ளார் வாயை கொடுத்து வம்பில் சிக்குவது இதுதானோ?