தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தெரிவித்த கருத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது, கடந்த அதிமுக ஆட்சியில் கொரோன பெரும் தொற்றின் போது மின்கட்டணம் அறிவிக்கபடாமல் அதிகரித்து கணக்கிடப்பட்டது பெரும் நெருக்கடியை பொதுமக்களுக்கு கொடுத்தது.
அப்போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி செந்தில்பாலாஜி என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த சூழலில் திமுக ஆட்சிக்கு வந்ததும் மின் கட்டணம் மாதம் ஒருமுறை என கணக்கிடப்படும் என அறிவித்தது, ஆனால் அதற்கு மாற்றாக தற்போது மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த சூழலில் பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
அதில் ஒருபகுதியாக நடிகை கஸ்தூரி செந்தில்பாலாஜியின் அறிவிப்பை கிண்டல் செய்துள்ளார், தமிழ் திரைப்படங்களில் நடிகையும் மற்றும் அரசியல் விமர்சகருமான நடிகை கஸ்தூரி திமுக அரசு குறித்து நக்கலாக ட்வீட் செய்திருக்கிறார்
அவர் பதிவிட்டிருக்கும் டீவீட்டில் :- “TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம் அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது” என கிண்டல் செய்துள்ளார், அறிவிக்கபடாத மின்தடை மாநிலங்களில் பல பகுதிகளில் நிலவுவதாக பலர் குற்றம் சுமத்தி வரும் சூழலில் கஸ்தூரி இவ்வாறு கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம் அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. 😜😎#vidiyalAatchi #TamilNadu
— Kasturi Shankar (@KasthuriShankar) July 19, 2022