Cinema

பிரேமலு படத்தில் ஆதி ஹீரோயினுக்கு கொடுத்த gift!!! ஓ இப்படித்தான் அந்த ரூபாய் நோட்டை வாங்குவதா!!! இணையத்தில் பரவும் வீடியோ!!

Premalu
Premalu

இன்று உள்ள காலகட்டத்தில் திருமண நாளோ அல்லது பிறந்த நாளோ ஏதாவது ஒன்று வந்து விட்டால் அனைவரின் மனதிலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது கிப்ட்ஸ் தான்!! நமக்கு பிறந்தநாள் என்றாலும் சரி நமக்கு பிடித்தவர்களுக்கு பிறந்தநாள் என்றாலும் சரி எந்த மாதிரியான பரிசு பொருட்களை கொடுக்கலாம்?? எது மாதிரியான பரிசுப் பொருட்கள் நமக்கு கிடைக்கும் என்று தான் அனைவரும் முதலில் யோசிக்க ஆரம்பிக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் தற்போது எங்கு பார்த்தாலும் கிப்ட்ஸ் கடைகள் அதிக அளவில் துவங்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது பிடித்தவர்களுக்கு கிப்ட்ஸ் வாங்குவதற்காகவே பல வெப்சைட்டுகளும் உருவாக்கப்பட்டு அதற்காகவே இயங்கி வருகிறது. உனக்கு பிடித்தவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அவற்றை அவர்கள் எதிர்பார்க்கும் விதத்திலேயே உருவாக்கிக் கொடுக்கும் பல வகையான  வெப்சைட்டுகளும் தொழில் முறைகளும் தற்போது உருவாகிவிட்டன. 


 மேலும் நமக்கு பிடித்தவர்கள் பயன்படுத்திய  பூக்களை கூட சேகரித்து தற்போது ரெசைஆர்ட் என்ற பெயரில் அந்தப் பொருள்களை எல்லாம் வைத்து அதன் மீது தண்ணீர் போன்ற ஒரு திரவத்தை ஊற்றி அதனை காய வைத்தால் அது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், மேலும் பல நல்ல நினைவுகளை உள்ளடக்கிய பொருள்களை கொண்டதாகவும் இந்த கிப்ட் அமைந்திருப்பதால் தற்போது அனைவரும் இந்த பொருளை அவர்களுக்கு பிடித்தவர்களுக்கு வாங்கி கொடுத்து வருகின்றனர். இதில் திருமணம் ஆனவர்கள் அவர்களின் திருமண பூக்கள் மற்றும் தாலி போன்றவற்றை வைக்கின்றனர். மேலும் பிறந்த குழந்தையின் ஞாபகார்த்தமாக அவர்களுக்கு முதலில் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் இதுபோன்று செய்து ஞாபகங்களாக வைத்துக் கொள்கின்றனர். மேலும் பென்சில் ட்ராயிங் போன்றவையும் தற்போது அதிக அளவில் பிடித்தவர்களுக்கு கொடுக்கும் கிப்ஸில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுபோல பல புதிய புதிய கிப்ட்ஸ் எல்லாம் தற்போது உருவாகிக்கொண்டே வருகிறது. 

 இந்த வரிசையில் தற்போது ரூபாய் நோட்டுகளில் உனக்கு பிடித்தவர்களின் பிறந்த தேதி போன்ற பல முக்கியமான செய்திகளை உள்ளடக்கிய வரிசை எண் கூடிய ரூபாய் நோட்டுகளை பரிசளிக்கும் முறை தற்போது இருந்து வருகிறது. சமீபத்தில் கூட பிரமலு என்ற திரைப்படத்தில் ஆதி என்ற கேரக்டர் ஹீரோயினுக்கு பிறந்தநாள் வந்தபோது  அவரின் பிறந்தநாள் தேதியை உள்ளடக்கிய பத்து ரூபாய் நோட்டினை பரிசாக கொடுத்திருப்பார். இதனை பார்த்தவர்கள் எப்படி இது சாத்தியமாகும் இதுபோன்று எல்லாம் கொடுக்க முடியுமா என்று வியப்பாக பார்த்தனர். இது உண்மையாகவே கிடைத்தால் நாமும் நம்மளுடைய  பிறந்தநாள் தேதி மற்றும் நமக்கு பிடித்தவர்களின் பிறந்தநாள் தேதி உள்ளடக்கிய ரூபாய் நோட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து வருகின்றனர். 

இதுபோன்ற ரூபாய் நோட்டுகள் எப்படி கிடைக்கிறது என்று தற்போது நெடிசைன் ஒருவர் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!! மேலும் இந்த பதிவுடன் ஒரு வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப் ஐ டவுன்லோட் செய்து நமக்கு தேவையான தேதியினை குறிப்பிட்டால்  அந்த நம்பர் உள்ள ரூபாய் நோட்டானது எவ்வளவு என்று உங்களுக்கு காட்டும். நீ வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த பணத்தினை கட்டி வாங்கிக் கொள்ளலாம். மேலும் நம்மிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து இதில் அப்லோடு செய்து விற்பனையும் செய்யலாம் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே இது போன்ற வித்தியாசமான கிப்ட்ஸ் வாங்கி நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து நாமும் மகிழலாம்!!!