Cinema

கமலஹாசன், விஜயை தொடர்ந்து விஷாலும் அறிவித்தார், பின்ணணியில் இவ்ளோ மேட்டரா?

VIJAY, KAMALHASSAN, VISHAL
VIJAY, KAMALHASSAN, VISHAL

நடிகர் விஷால் மிகவும் திறமையான முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு வருகிறார். 2004 ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு திரைப்படத்திலும் ஹீரோ கேரக்டரில் சூப்பராக நடித்து அதிக அளவில் ரசிகர்களையும் பெற்று வந்துள்ளார். சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி எனத் தொடங்கி கடைசியாக மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தின் ஹீரோவாகவும் நடித்து அந்த திரைப்படம் திரையரங்குகளில் சூப்பராக ஓடியது!! நடிப்பில் மட்டுமல்லாமல் இவர் பாடகராகவும் சமீபத்தில் வலம் வந்து கொண்டுள்ளார். மேலும் 2013 ஆம் ஆண்டு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியை தொடங்கி பல திரைப்படங்களை உருவாக்கி அவை அனைத்திலும் அவரும் நடித்துள்ளார். அவற்றில் பாண்டிய நாடு, கதக்களி, துப்பறிவாளன் மற்றும் இரும்புத்திரை போன்ற பல திரைப்படங்கள் இவரின் தயாரிப்பில் அவரை நடித்த திரைப்படம் ஆகவும் இருந்து வருகிறது.


இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரை உலக சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் பல சர்ச்சைகளில் சிக்கி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் சார்பாக வெளியேற்றப்பட்டார். அதன் பின் 2017 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நின்று தேர்தலில் வெற்றி பெற்றார். மேலும் 2017 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்களின் மரணத்தை தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ராதா கிருஷ்ணன் நகர் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அதன் பின் அவரது வேட்புமனுவானது நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும்  2026 ஆம் ஆண்டில் நடக்கப் போகும் தேர்தலில் விஷால் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார்!! தற்போது நடிகர்களாக இருக்கும் கமலஹாசன் மற்றும் விஜய் ஆகியோர் அரசியலுக்கு அடுத்தடுத்து வந்துள்ளனர். மேலும் நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டில் நடக்கப்போகும் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி பல அரசியல் வேலைகளை செய்து கொண்டு வருகிறார். 

இந்த நிலையில்  தற்போது 2026 ஆம் ஆண்டில் நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலில் தற்போது விஷாலும் கண்டிப்பாக அரசியலுக்கு வரப்போவதாக ஒரு நிகழ்வில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது!! சாலை விதிகளும் விவசாயிகளும்  மேலும் பொது மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள ஆட்சியில் அது நடக்கவில்லை எனவே நான் கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டில் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் ஏதேனும் கட்சியில் கூட்டணி அமைக்க போகிறாரா அல்லது தன்னிச்சையாக ஒரு கட்சியினை ஆரம்பிக்கப் போகிறாரா என்று இன்னும்  தகவல்கள் கிடைக்கவில்லை!! ஏற்கனவே தொடர்ச்சியாக  பல திரை பிரபலங்கள் அரசியலில் வந்து கொண்டு இருக்கும் பொழுது தற்போது விஷாலும் அரசியலுக்கு வரப்போவதை கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!மேலும் இதுகுறித்து சினிமா வட்டாரத்தில் சிலரிடம் கேட்கும்போது உதயநிதியை எதிர்த்து அரசியல் செய்தால் அரசியலில் கவனம் பெறலாம் என கணக்குப்போட்டு விஷால் இறங்கியுள்ளார் எனவே விரைவில் அவர் அரசியல் அறிவிப்பை வெளியிடலாம் என வேறு கூறுகின்றனர்..