Cinema

ராம் சரணுக்கு கிடைத்த கௌரவ பட்டம்!! பெருமையில் தந்தை சிரஞ்சீவி!!!

RAMSARAN, CHIRANJEEVI
RAMSARAN, CHIRANJEEVI

டோலிவுட் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ராம்சரண்!! டோலிவுட்டில் வெளியாகும் திரைப்படங்களை உலக அளவிற்கு உள்ள சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு இணையாக நடித்து டோலிவுட் திரைப்படங்களுக்கு புகழ்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டே வருகிறார். தெலுங்கு திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள நடிகர்களில் இவர் டாப்பில் உள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னை வளர்த்துக் கொண்டு தற்போது பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். மேலும் சிறந்த நடிப்பிற்காக ஃபிலிம்பேர் , நந்தி விருது போன்ற விருதுகளை வாங்கி மேலும் புகழை சேர்த்துள்ளார். இவர் நடிப்பு தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளைக் கொண்டு இருந்தாலும் நடனம் ஆடுவதிலும் சிறப்பு வாய்ந்தவர் ஆவார். தெலுங்கு திரை உலகில் ஒரு ஸ்டாராக வலம் வந்து கொண்டுள்ள சிரஞ்சீவி தான் இவரின் தந்தை ஆவார். மாவீரன் என்னும் திரைப்படத்தில் இவரின் நடிப்பு சூப்பராக அமைந்திருந்ததால் இவருக்கு அந்த திரைப்படத்திற்கு பிறகு அதிக அளவில் ரசிகர்கள் தோன்றினர்.


இந்தத் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. மேலும் தெலுங்கில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ரசிகர்கள் அதிக அளவிலேயே இருக்கின்றனர். அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார். 2022 ஆம் ஆண்டு  வெளியான RRR திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்து அந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் சூப்பராக ஓடி பாக்ஸ் ஆபிஸ் நிறைந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் ராம்சரண் மிகவும் பிரபலமான நடிகராகவே அனைவராலும் பார்க்கப்பட்டார். மேலும் இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் அதிகமாக ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இதைத்தொடர்ந்து தற்போது ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டமும் வழங்கி சிறப்பித்துள்ளனர்!! அதாவது, ஒவ்வொரு வருடமும் வேல்ஸ் பல்கலைக்கழகமானது கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கு திரைப்படத்தில் நடித்தவரும் ராம் சரண் நடிப்பில் செய்த சாதனைகளுக்காக டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

இந்த பட்டத்தினை அகில இந்திய தொழில்நுட்ப கல்வியின் வேந்தரான பேராசிரியர். சீதாராமன் விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இவ்வாறு ராம்சரண் கௌரவ பட்டம் பெற்றதை வைத்து இணையங்களில் பலவாறு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமே வருகின்றது. அந்த வகையில் ராம்சரனின் தந்தையான சிரஞ்சீவி, தனது இணையதள பக்கத்தில் பாராட்டியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதில் இருப்பது என்னவென்றால் " தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான வேல்ஸ் பல்கலைக்கழகம் இப்போது என் மகனான ராம் சரணுக்கு  டாக்டர் பட்டம் வழங்கியிருப்பது ஒரு தந்தையாக நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. பிள்ளைகள் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவது தான் பெற்றோர்களுக்கு பெருமையை அளிக்கும்!! லவ் யூ மை டியர் டாக்டர் ராம் சரண்!!" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டத்தினை பற்றி திரை உலகத்திலுள்ளவர்களும், இவரின் ரசிகர்களும் அதிக அளவில் பாராட்டியும் வருகின்றனர். தற்போது இது குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!