Politics

கனவிலும் எதிர்பாராத சம்பவம் ஒரே நாளில் முடித்துவிட்ட அமிட்ஷா. ...! அப்படியே மாறிய விஷயம்! இனி கையே வைக்க முடியாது!

amitsha
amitsha

வரலாற்று சிறப்புமிக்க வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ அறிமுகப்படுத்தியுள்ளார் வக்பு சட்ட மசோதா இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு லோக்சபாவில் நிறைவேறி உள்ளது 



இந்நிலையில் வக்பு சட்டம் எதற்காக கொண்டுவரப்படுகிறது இதன் நோக்கம் என்ன என் மாநில அரசுகள் இதனை எதிர்க்கிறது என்றால், முதலாமவதாக வக்ஃப் என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களைக் உள்ளடக்கியது. வக்பு சொத்துக்களை விற்க தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு நிலத்தை தன்னால் பராமரிக்க முடியவில்லை என்ற பட்சத்தில் இதனை அல்லாஹ்வுக்கு வழங்கப்படுகிறது இதனாலே இதனை யாருக்கும் மாற்ற முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது.

இந்தியா முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் சொத்துக்களை வக்ஃப் வாரியங்கள் தற்போது கட்டுக்குள் வைத்திருக்கின்றன, இதன் மதிப்பு 1.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக வக்ஃப் சொத்துக்களை வைத்திருக்கும் நாடு இந்தியா. மேலும், ஆயுதப்படைகள் மற்றும் இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக இந்தியாவில் மிகப்பெரிய நில உரிமையாளர் வக்ஃப் வாரியம் ஆகும் .இந்நிலையில் தான் வக்ஃப் வாரியம் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல், சரியான கணக்குகளைப் பராமரிக்காதது என பல்வேறு பிரச்சனையை சந்தித்து வருகிறது இதனால் சமூகத்தில் மத பிரசனைச்சனையும் அதிகரித்து வருகிறது.

மாநில வக்ஃப் வாரியங்களும் சட்டத்தின் சில விதிகளை தவறாகப் பயன்படுத்தியுள்ளன, வக்பு மூலம் 40,951 வழக்குகள் தீர்பாயங்களில் நிலுவையில் உள்ளன. அதில், 9942 வழக்குகள் வக்ஃப் நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். சிறந்த எடுத்துக்காட்டுக்காக தமிழகத்தில் திருச்சி மாவட்டம் திருச்செந்துறை  கிராமம் முழுக்க வக்பு சொத்தில் இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானதை அடுத்து இங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அது போல, கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் 404 ஏக்கர் கிறித்தவ நிலத்தை வக்பு உரிமை கோரியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 123 முதண்மையான இடங்களி வக்பு உரிமை கூறியது இதுபோல இந்தியாவில் பல இடத்தை வக்பு சொந்தம் கொண்டாட நினைத்தது இதனால் மத பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. 

இதனையெலாம் கட்டுப்படுத்தவே மத்திய அரசு தற்போது புதிய வக்பு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதில் உள்ள புதிய நோக்கமே, குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்ஃப் அறிவிக்க முடியும் என்று மசோதா கூறுகிறது. அறிவிக்கப்படும் சொத்தை அந்த நபர் சொந்தமாக வைத்திருக்க வேண்டும், மத நோக்கங்களுக்காக நீண்டகாலமாகப் பயன்படுத்துவதன் அடிப்படையில் சொத்துக்களை வக்ஃப் என்று கருதக்கூடியதை இது நீக்குகிறது, வக்ஃப் பெண் வாரிசுகள் உட்பட, நன்கொடையாளரின் வாரிசுக்கு பரம்பரை உரிமைகளை மறுக்கக் கூடாது என்றும் இது கூறுகிறது. வக்பு சட்டத்தில் இரண்டு பெண் உறுப்பினர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதையும் இது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மசோதா மத்திய அரசுக்கு முக்கியத்தும் கொடுக்கிறது அதாவது, வக்பு சொத்துக்களை பதிவு செய்தல், கணக்குகளை வெளியிடுதல் மற்றும் வாரியங்களின் நடவடிக்கைகளை வெளியிடுதல் போன்றவற்றில் உரிமை கொண்டாட உள்ளது. மேலும், மாநில அரசு எந்த நேரத்திலும் வக்ஃப் கணக்குகளை பார்வையிடலாம் என்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. மத்திய அரசு உள்ளே வருவதால் மாநில அரசு இதனை எதிர்க்கிறது என்றும் அனைத்து மக்களும் நலம் பெற வேண்டும் வக்பு மூலம் இஸ்லாமியர்கள் பயனடைவதில்லை என்பது உணர்ந்தே இந்த சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டியுள்ளார். இஸ்லாமியர்களும் இதனை வரவேற்க தொடங்கியுள்ளனர்.