Tamilnadu

குற்றவாளி ஷாருக் மகன் ஆதரவு நிலைப்பாடு எடுத்த திமுக பிரமுகருக்கு சிக்கல் !

sharuk khan
sharuk khan

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு சிக்கலில் சிக்கியுள்ளார் திமுக பிரமுகர் சல்மா, போதை பொருள் குற்றவாளிக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட நபரை கட்சியில் இருந்தும் பொறுப்பில் இருந்தும் நீக்கவேண்டும் என வலியுறுதல்கள் அதிகரித்து வருகின்றன.


மும்பையில் இருந்து கடந்த அக்டோபர் 3-ம் தேதியன்று கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப்பொருள் தடுப்பு அதிகரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரியவந்தது. 

இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த கோர்ட்டு ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. 

மேலும், அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர்  இரண்டாவது முறையாக மனு தாக்கல்  செய்தனர்.  இந்த மனு இன்றைக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன்கான், அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது. 

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாருக்கான் மகனிற்கு எதிராக வலுவான ஆவணங்கள் இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது, மேலும் குற்றவாளி தரப்பில் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன, இந்த சூழலில் குற்றவாளி ஆர்யானிற்கு ஆதரவாக திமுக பிரமுகர் சல்மா கருத்து பதிவிட்டுள்ளார் அதில் :- ஒரு தாயாக மனம் வருந்துகிறேன். ஒரு இஸ்லாமியனாக வேதனையுறுகிறேன். ஒரு இந்தியனாக அவமானமுறுகிறேன். ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜை என சொல்லவே மனம் கூசுகிறது. ஜனநாயகம் என்பதன் அர்த்தம் சமத்துவம் என்பதே  என சுதந்திர போராட்ட தியாகியை உள்ளே வைத்தது போன்று போதை பொருள் வழக்கில் சிக்கிய சல்மான் கான் மகனிற்கு ஆதரவாக பேசியுள்ளார் சல்மா, இங்கு மதம் எங்கு வந்தது இஸ்லாமியனாக வேதனை படுகிறேன் என சொல்ல என்ன காரணம்.

வங்கதேசத்தில் அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்ட போது சல்மா போன்றவர்கள் இதுவரை வாய் திறக்கவில்லை குற்றவாளி சாருக்கான் மகன் என்பதால் வாய் திறக்கிறார் அதுவும் இஸ்லாமியனாக என சொல்ல கொஞ்சமும் வேதனை படவில்லையா? 23 வயதானவன் சிறுவனா சிக்கியது வயிற்று பசிக்கு திருடி மாட்டி கொள்ளவில்லை.மாறாக பல கோடிகள் செலவு செய்து உல்லாச கப்பலில் போய் வலுவான ஆதரங்களுடன் சிக்கியுள்ளார்.

23 வயது இளைஞனை குழந்தை என்கிறீர்கள், பெரியார் சிலை மீது பெயிண்ட் ஊற்றினான் என்ற குற்றத்திற்காக அவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டு ஜாமீனில் வெளிவரமுடியாமல் செய்தார்களே அந்த இளைஞன் வயது அப்போது 21, அவர் மீது உங்கள் கரிசனம் ஏன் விழ வில்லை, குற்றவாளியை குற்றவாளியாக பார்க்காமல் மதத்துடன் ஒப்பிட்டி பேசும் சல்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பலரும் இணையத்தில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆமாம் இப்போது பொதுவான கட்சியில் இருக்கும் சல்மா இஸ்லாமியனாக வருந்துகிறேன் என போதை பொருள் குற்றவாளிக்கு ஆதரவாக கருத்து பதிவிடும் இவரின் சார்பு நிலைப்பாடு குறித்து கட்சி தலைமை என்ன செய்ய போகிறது.