Tamilnadu

சந்தானம் பட பாணியில் பிரபல தமிழக ஊடகத்தை பங்காமாக கலாய்த்த அண்ணாமலை !

annamalai
annamalai

பிரபல தமிழக ஊடகமான நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கலாய்துள்ளார், நியூஸ்7தமிழ் கேள்வி நேரம் என்ற விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகிறது இதில் முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் ஊடகங்களால் மிகைப்படுத்த படுகிறது என்ற அண்ணமலையின் குற்றசாட்டு என தலைப்பு வைத்து கேள்வி எழுப்பியது.


அதில் மக்கள் தங்கள் கருத்தாக பதிவு செய்ய 4 பதில்களையும் வைத்தது 1) எதிர்க்கட்சி அரசியல் 2) உண்மைக்கு புறம்பானது 3)ஊடகங்களுக்கு நெருக்கடி தர 4) சிறப்பாக செயல்படுவதால் என 4 பதில்களை கொடுத்தது இதில் எந்த பதிலுமே அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு ஆதரவாகவோ அல்லது ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராகவோ இல்லை முழுக்க முழுக்க திமுகவிற்கு அடிமை சாசனம் வீசுவது போன்றே கேள்விகள் இருந்தன.

அண்ணாமலை தெரிவித்த கருத்து சரி அல்லது தவறு என பதில்கள் வைத்து இருந்தால் மக்கள் மனது என்ன என்பது குறித்து தெரியவரும் ஆனால் அப்படி ஏதும் பதிலில் இல்லை சந்தானம் ஜெயம் ரவியிடம் இந்த ரெண்டு விரலில் ஒரு விரலை தொடு என ஒற்றை விரலை மட்டுமே காட்டியே கேள்வியை எழுப்பி இருப்பார் அந்த காமெடி போன்றே இருந்தது தனியார் தொலைக்காட்சியின் செயல்பாடு.

இதனை அண்ணாமலையும் கலாய்துள்ளார், நியூஸ்7 தமிழ் எழுப்பிய கேள்வியின் ஸ்கிரீன் ஷாட் புகைப்படத்தை பகிர்ந்த அவர் அதில் Anna @news7tamil. என்ன இது? 😁Question is ok but why all options are one sided?  கொஞ்சம் கருணை காட்டுங்க ☺️!என கலாய்துள்ளார். இதற்கு பலரும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர் பிரபல மீம் பக்கமான நாச்சியார் தமிழச்சி பக்கம் நியூஸ்7தமிழை டேக் செய்து செருப்பால் அடித்த மாதிரி இல்லை செருப்பாலதான் அடிச்சாருக்காரு என சந்தானம் மீம்ஸை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளது.

அண்ணாமலை கூறியது 100 % சரி என்பது நியூஸ்7 வைத்த கேள்வி பதிலில் இருந்தே வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது , இனியாவது ஊடகங்கள் தங்களது போக்கினை மாற்றி கொள்ளவேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.