பிரபல மேடை பேச்சாளர் சுந்தரவள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் அவரது கட்சியை சேர்ந்த சிலர் தூத்துக்குடியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.அப்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற சுந்தரவள்ளி வன்னியரசு உட்பட பலர் செருப்புடன் கோவில் சன்னதி வளாகத்தில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார் சுந்தரவள்ளி, இந்து மதம் நம்பிக்கை இல்லை என சொல்லி கொள்பவர்கள் சுந்தரவள்ளி மற்றும் வன்னியரசு இருவரும் பல மேடைகளில் விவாதங்களில் இந்து கடவுள்களை விமர்சனம் செய்து இருக்கின்றனர்.அப்படிப்பட்ட கொள்கை கொண்ட நபர்கள் இந்து மக்களின் புனித தளங்களில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற நிலையில்.,
அங்கு செருப்பு காலுடன் நின்று புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர் உண்மையான பக்தர்கள் பலர் அதே புகைப்படத்தில் காலில் செருப்பு இல்லாமல் இருப்பதை காண முடிகிறது.இது குறித்து முருகன் பக்தர்கள் பலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், இந்து மத கடவுள் நம்பிக்கை இல்லை என தெரிவிப்பவர்கள் முதலில் ஏன் கோவிலுக்கு வரவேண்டும் அப்படியே வந்தால் ஏன் செருப்புடன் சன்னதி வளாகத்திற்கு வர வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர்.
சுந்தரவள்ளி வருவது தெரியாது, எப்படி அய்யா கண்ணு திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களிடம் நோட்டீஸ் அநாகரிமாக விநியோகித்து பெண்ணிடம் பளார் என அரை வாங்கினாரோ? அதே போன்று செருப்பு காலுடன் சன்னதி வளாகத்திற்கு செல்ல போகிரோம் என சுந்தரவள்ளி தெரிவித்து விட்டு சென்று இருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை நெட்டிசன்கள் குமார் என்பவர் ட்விட்டரில் எழுப்பியுள்ளார்.
சுந்தரவள்ளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்தியா குறித்து தவறாக பேசியது, இந்திய ராணுவத்தை தர குறைவாக விமர்சனம் செய்தது எதிரி நாடான பாகிஸ்தானை புகழ்ந்து பேசியது, பல்வேறு கட்சி தலைவர்களை மூன்றாம் தரமாக பேசியது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன தற்போது பெற்றும்பான்மை சமுதாயமான இந்துக்கள் வணங்கும் தெய்வத்தின் சன்னதியில் செருப்புடன் நின்று மேலும் மேலும் சமுதாயத்தில் பிளவுகளை உண்டாக்கும் சுந்தரவள்ளியை தமிழக காவல்துறை கைது செய்யவேண்டும் எனவும் இல்லை என்றால் ஒட்டுமொத்த இந்து சமுதாயம் தண்டிக்கும் நாள் வரலாம் என ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.