தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு போராட்டம் நேற்று நடத்த முயன்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய பொதுச் செயலாளர் நிதி திரிபாதி உள்ளிட்ட 34 பேர் பிப்ரவரி 14ஆம் தேதி திங்கள்கிழமை (நேற்று ) கைது செய்யப்பட்டனர். மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ஏபிவிபி தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிபாதி கூறுகையில், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகும் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்றும், கட்டாய மதமாற்ற அழுத்தத்தால் மாணவி உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
லாவண்யா வழக்கில் முதல் குற்றவாளி சகாய மேரியை திமுக எம்எல்ஏ சந்தித்து ஆதரவு தெரிவித்தது தமிழக அரசின் நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக வெளிக்கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார்,
பிப்ரவரி 14, திங்கட்கிழமை, தஞ்சாவூர் மாணவர் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) மனு தாக்கல் செய்தார்.
சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கை கவுரவப் பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டாய மதமாற்ற புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த சூழலில் ஸ்டாலின் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய ABVP மாணவ அமைப்பினரை தமிழக காவல்துறை மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ABVP அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னை வரலாம் என்பதால் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது, திமுக எம்எல் ஏ இனிகோ இருதயராஜ் சகாயமேரியை சிறையில் சந்தித்து வரவேற்ற காட்சிகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளன.
தமிழக காவல்துறை மாணவ அமைப்பினரை கைது செய்துள்ள சூழலில் நாட்டின் தலைநகரில் தமிழ்நாடு இல்லம் முன்பு துணை ராணுவத்தை குவித்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நிலைமை கைமீறி சென்றுள்ளது.