Tamilnadu

"லாவண்யா" வழக்கில் மற்றொரு திருப்பம் கிடா விருந்து வைத்தது அம்பலம்!

Lavanya
Lavanya

பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் லாவண்யா படித்த பள்ளி ஊர் மக்களுக்கு பள்ளி நிர்வாகம் கிடா விருந்து வைத்தது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார் இது குறித்து வார இதழ் ஒன்றில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது அதில்,.


கிடா விருந்து வைத்தது ஏன்? தமிழக பாஜ துணை தலைவர் கறுப்பு முருகானந்தம்: மதமாற்ற தடை சட்டம் கட்டாயம் தேவை.மதமாற்ற தடை சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தால்,  இந்து மதம் மட்டுமின்றி அனைத்து மதத்துக்கும் பாதுகாப்பு ஏற்படும்.

அரியலுார்  மாணவிவை மதம் கறுப்பு முருகானந்தம் மாற மிரட்டியதால்தான்  அவர் தற்கொலை முடி வுக்கு வந்துள்ளார். அவர் இறந்த பின்பு  பயந்து போன பள்ளி நிர்வாகத்தினர் ஊர் 

மக்களை அழைத்து கிடா விருந்து நடத்தி,  பள்ளிக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் ஊர் மக்க ளும் அந்த பள்ளிக்கு ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளனர்.

அந்த பள்ளியில் படித்த. முன்னாள் மாணவிகள் சிலர் பள்ளியில் மதமாற்றம் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக பேச பயப்படுகின்றனர். மாணவியை  போன்று இனி யாரும் மத மாற்றம் காரணமாக இறக்கக்கூடாது என்பதற்காகத்தான்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறோம்.

பல பள்ளிகளில் மத மாற்ற பிரச்சாரம் நடக்கிறது. அது குறித்து எங்களுக்கு தகவல் தெரிவித்தால், சம்பந்தப் பட்டவர்கள் பெயர்களை ரகசியமாக. வைத்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.மன்னார்குடியில் ஒரு பள்ளியில் மதமாற்ற பிரச்னை பல ஆண்டுகளாக 

தொடர்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருப்பு முருகானந்தம் பேட்டியை தொடர்ந்து ஏன் பள்ளி நிர்வாகம் ஊர் மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தது அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

More watch videos