Tamilnadu

#BREAKING அதிரடி திருப்பம் ஆசிரியருக்கு கிடைத்த மரண அடி இனி கனவிலும் பேசமாட்டார்!

kanchipuram
kanchipuram

ருட்ராட்சம் அணிந்து பள்ளிக்கு சென்ற மாணவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஆசிரியர் ஜாக்சனுக்கு மரண அடி கிடைத்துள்ளது, அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை பள்ளி நிர்வாகம் வேறு இடத்திற்கு மாறுதல் செய்துள்ளது.


நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து வந்த மாணவர்களை, இழிவாக பேசிய பள்ளி ஆசிரியர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன அய்யன்குளம், இந்திரா நகரைச் சேர்ந்த கமலகண்ணன் - ஹேமாவதி தம்பதி மகன் கிருபானந்தன், 14; குமார் - ராதிகா தம்பதி மகன் கிருபாகரன், 14.இருவரும், காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், பிளஸ் 1 படிக்கின்றனர்.

இவர்கள் இந்து மதத்தை பின்பற்றி, நெற்றியில் திருநீறு பூசியும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தும் தினமும் பள்ளி செல்வது வழக்கம்.இரு வாரத்திற்கு முன், பள்ளி சென்ற இரு மாணவர்களை பார்த்து, ஆசிரியர் ஜாய்சன் என்பவர், 'பொறுக்கிகள் தான் ருத்ராட்சம் அணிந்திருப்பர்' எனக்கூறி, அவர்களை அடித்துஉள்ளார். இதனால், இருவரும் பள்ளி செல்ல விரும்பவில்லை என, பெற்றோரிடம் கூறினர்.அவர்கள் விசாரித்த போது, ஆசிரியர் ஜாய்சனின் நடவடிக்கைகளை அறிந்தனர்.

தொடர்ந்து முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு, பெற்றோர் புகார் மனு அனுப்பினர். கடந்த, 17ம் தேதி சிவகாஞ்சி காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.இதையடுத்து, அசிங்கமாக பேசுதல், மதத்தை இழிவுபடுத்தி பேசுதல், மாணவர்களை அடித்தல் என, ஆசிரியர் ஜாய்சன் மீது மூன்று பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ஜாய்சனை மதுராந்தகம் சி.எஸ்.ஐ., பள்ளிக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்பெல்லாம் இந்து மாணவர்கள் அல்லது இந்து மதம் குறித்து தவறாக பேசிவிட்டு மாணவர்களை இழிவுபடுத்தும் செயலில் பல்வேறு ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களுக்கு எதிர்ப்புகள் எழாது ஆனால் இப்போது சிறுவிஷயம் என்றாலும் சமூக வலைத்தளம் மூலம் பல அமைப்புகள் ஒன்று கூடி விடுகின்றன, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதுடன்.

தவறு இழைத்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்கிறது, தன்னை எதுவும் செய்யமுடியாது இந்த பள்ளியில் இருந்து என்னை எங்கும் மாற்ற முடியாது ena பேசிய ஆசிரியர் ஜாய்சனுக்கு மரண அடி கிடைத்துள்ளது பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதுடன் அவர் இனி மாதம் மாதம் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் உண்டாகியுள்ளது.

இந்தியாவில் இது போன்று பள்ளி அளவில் நடைபெறும் மத மாற்றங்களை கண்டுகொள்ளவில்லை என்றால் எப்படி அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சூழல் உள்ளதோ அதே போல் இந்தியாவிலும் போராட வேண்டிய சூழல் உண்டாகலாம் என பல இந்து அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.