தமிழக அரசியலில் அண்ணாமலை செந்தில்பாலாஜி இடையே நடைபெறும் இருவேறு குற்றசாட்டுகள் தற்போது தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது, மின்சாரவாரியத்தில் ஊழல் நடைபெற இருப்பதாகவும் இதன் பின்னணியில் நலிவடைந்த நிறுவனம் ஒன்றை வாங்கி அதற்கு 4000 முதல் 5000 கோடி அளவிற்கு டெண்டர் கொடுத்து மிக பெரிய ஊழல் நடைபெற இருப்பதாக அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஊழல் நடைபெற்றது என கூறும் அண்ணாமலை ஆதாரத்தை வெளியிட வேண்டும் எனவும் 24 மணி நேரத்தில் ஆதாரத்தை வெளியிடவில்லை என்றால், மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவித்தார், செந்தில் பாலாஜி சவால் விட்ட ஒருமணி நேரத்தில் அண்ணாமலை வங்கி கணக்கு பரிமாற்றம் குறித்த தகவலை அளித்து கடந்த 4 மாதங்களாக நிறுத்திவைத்த தொகை,4% கமிஷன் பெற்றுக்கொண்டு விடுவித்ததாக குறிப்பிட்டார்.
இது கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், செந்தில்பாலாஜி இது முறையான ஆதாரம் இல்லை என பல்வேறு விளக்கங்களை கொடுத்தார், இந்நிலையில் இன்று அண்ணாமலை மீண்டும் கோபாலபுரம் () என குறிப்பிட்டார், இந்த சூழலில் சம்பந்தபட்ட நபர்களுக்கு என்ன நடந்தது என புரிந்துவிட்டதாகவும்.
விஷயம் மிகவும் சீரியஸ், நம்மை பேசவைத்து விவாத பொருளாக மாற்றி அதன் பிறகு ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட போகிறார், இதில் வலுவான ஆதாரம் இருப்பதாகவும், அண்ணாமலையிடம் ஆதாரம் சிக்க யார் காரணம் என மின்சாரவாரிய உயர் அதிகாரிகள் தொடங்கி, காண்ட்ராக்ட் நிறுவனம் வரை தூசி தட்டி வருகிறதாம் அமைச்சர் தரப்பு.
ஆனால் யார்தான் விஷயத்தை சொன்னது என இப்போதுவரை தெரியவில்லையாம், இதே போன்று சவால்கள் விடுத்தால் ஒரு நேரத்தில் ஆதாரம் முழுவதும் வெளியாகும் என நினைத்த அமைச்சர் தரப்பு இப்போது விஷயத்தை ஆரப்போடா நினைக்கிறதாம். விரைவில் இதே போன்று பல அமைச்சகங்களிலும் நடைபெறும் ஊழல்கள் குறித்து தகவல்களை வெளியிட பட்டியலே தயாரித்து உள்ளதாம் அண்ணாமலை தரப்பு.