Tamilnadu

சேகர் ரெட்டி டைரி ஆதாரமாக தெரிகிறது ரபேல் ஜெராக்ஸ் ஆதாரமாக தெரிகிறது அண்ணாமலை தெரிவித்தது ஆதாரமாக தெரியவில்லையா ஊடகங்களுக்கு பத்திரிகையாளர் சரமாரி கேள்வி !

uthayakumar senthivel
uthayakumar senthivel

தமிழக ஊடகங்கள் அண்ணாமலை மின்சாரவாரியத்தில் ஊழல் நடைபெறுவதாக புகார் தெரிவித்த நிலையில் செந்தில்பாலாஜி ஆதாரத்தை வெளியிடுங்கள் என கேள்வி எழுப்பினார் அதற்கு அண்ணாமலை மின்துறையில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கட்டணத்தை வழங்க கமிஷன் பெறப்பட்டதாக அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார் .


இந்த சூழலில் அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்  ஊடகங்கள் விவாதம் நடத்தாத சூழலில் பத்திரிகையாளர் உதயகுமார் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து அவர் குறிபிட்ட கருத்து பின்வருமாறு : excel சீட் எல்லாம் ஒரு ஆதரமா என கேட்பவர்கள் கவனத்திற்கு  சேகர் ரெட்டி டைரியில் பெயர் இருந்தது என வெளியான செய்திகளின் அடிப்படையில் அதில் இடம்பெற்றவர்கள் அனைவரையும் பதவி விலக அறிக்கை வெளியிட்டார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.

டைரியில் பெயர் இருப்பதெல்லாம் ஒரு ஆதரமா என கேட்காமல் ஊடகங்கள் ஒரு வாரம் விவாதம் நடத்தின.தனியார் ஊடகம் ஒன்று ரபேல் ஊழல் நடைபெற்றதாக ஒரு xerox copy வெளியிட நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் விவாதம் நடத்தின அது எல்லாம் உங்களுக்கு ஆதாரமாக தெரிந்தது நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு தொகை மாறியதை  சரியாக குறிப்பிடுகிறார் அண்ணாமலை , 

இது உங்களுக்கு ஆதாரமாக தெரியவில்லை என்றால் ஒன்று உங்கள் நிலைப்பாடு தவறு அல்லது உங்கள் கொள்கையே திருட்டை மறைப்பதாக இருக்க வேண்டும்.என உதயகுமார் செந்தில்வேல் குறிப்பிட்டுள்ளார் .தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியிலேயே ஊடகங்களுக்கு எதிராக விமர்சனங்கள் அதிகரித்து வருவது , தமிழகத்தை சேர்ந்த பரப்பரியமான ஊடகங்கள் பலவற்றின் நம்பிக்கை தன்மை கேள்வி குறியாக மாறியுள்ளது .