Tamilnadu

அமித் ஷா வந்த சிறிது நேரத்தில்... அமலாக்கத்துறை கொடுத்த அப்டேட் ! கதறலில் கோபாலபுரம் ...தலைகீழாக மாறிய சம்பவம்..

amitsha , mkstalin
amitsha , mkstalin

அமித் ஷா  சென்னை வந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அறிவித்த பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழி, தொகுதி மறுவரையறை, சனாதன பிரச்னைகளை தி.மு.க., எழுப்புகிறது.வரும் தேர்தலில், தி.மு.க.வின் மோசடி, ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசுபொருள் ஆக இருக்கும்.


டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளை மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. மின்சாரம், நிலக்கரியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியும், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாயும், பண மோசடி மூலம் ஆயிரம் கோடிக்கு மேலும் தமிழகத்தில் ஊழல் நடக்கிறது.மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை தி.மு.க., பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட விவகாரத்தில் அ.தி.மு.க., உடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது செயல்திட்டம் உருவாக்கப்படும். தமிழக மக்களை சந்திக்கும்போது, அவர்கள் உண்மையாக சந்திக்கும் பிரச்னையை எடுத்து செல்வோம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்துவோம். 

தி.மு.க.,வை போன்று மடைமாற்றும் திட்டத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம்.ஊட்டச்சத்துக்கு சாதனம் வாங்குவதில் ரூ.450 கோடி, செம்மண் கடத்தல், அரசு வேலைக்கு பணம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் என பல மோசடி நடக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும். என கூறியது தற்போது திமுக தரப்பில் கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. நேரடியாக கோபாலபுரத்தை  உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தாக்கியிருப்பது திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் இடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. 

இதற்கிடையே தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் நேரு. திமுக மூத்த தலைவர்களில் ஒருவர். பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவர். இவரது மகன் அருண் பெரம்பலூர் லோக்சபா தொகுதி எம்பியாக உள்ளார். நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் என்று 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களும் கட்டுமான தொழில், மின் உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், மகன் வீடு, அலுவலகம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. காற்றாலை மின் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை, மோசடியாக வேறு நிறுவனங்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தொடர்ந்து 3 நாள் அமலாக்கதுறையினர் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந் நிலையில் அமலாக்கத்துறை எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சோதனையின் போது என்ன கைப்பற்றப்பட்டது என்பதை குறிப்பிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;சென்னை, திருச்சி மற்றும் கோயமுத்தூர் ஆகிய இடங்களில் 2002ம் ஆண்டின் PMLA பணபரிமாற்ற சட்டத்தின் படி Truedom EPC India Pvt Ltd மற்றும் அதன் முக்கிய பணியாளர்களுடன் தொடர்புடைய 15 இடங்களில் ஏப்.7ம் தேதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சோதனை நடவடிக்கைகளின் போது, பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. என அறிவித்த சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கே.என்.ரவிச்சந்திரன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், கே.என்.ரவிச்சந்திரன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமித் ஷா சென்னையில் இருக்கும் நேரத்தில் திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது அமலாக்கத்துறை.