லாவண்யா விவகாரத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் வீடு முற்றுகையிடபட்ட சம்பவம் இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை ABVP அமைப்பை சேர்ந்த பெண்கள் ஆண் மாணவர்கள் திடீர் என முற்றுகையிட்டதும் முதல்வர் வீட்டினை நோக்கி முன்னேறிய சம்பவத்தால் ஆடி போயிருக்கிறது ஆளும் திமுக அரசு.
தஞ்சையை சேர்ந்த கிறிஸ்துவ பள்ளியில் பயின்ற மாணவி லாவண்யா விடுதி காப்பாளர் சகாயமேரி மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் சிலர் மீது தன்னை கொடுமை படுத்தியதாகவும் மேலும் மத மாற சொல்லி கொடுமை படுத்தியதாகவும் கூறி தற்கொலை செய்து கொண்டார் இந்த வழக்கு இந்திய அளவில் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.
மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் மாநில அரசின் விசாரணை சரியில்லை மேலும் நடுநிலையாக இல்லை என கூறி சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது, இந்த வழக்கில் இத்துடன் விவகாரம் முடியும் சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என மாணவியை இழந்த பெற்றோர் காத்து இருக்கையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது, இது பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் உண்டாக்கியது, ஏன் மாநில திமுக அரசு லாவண்யா விவகாரத்தில் வழக்கு சிபிஐ வசம் செல்வதை எண்ணி பயம் கொள்கிறது என கடுமையான விவாதங்கள் எழுந்தன.
இந்த சூழலில் தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசு லாவண்யா விவகாரத்தை கவுரவ பிரச்னையாக கருதுவது ஏன் என கேள்வி எழுப்பியதுடன் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை இல்லை எனவும் லாவன்யா வழக்கை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த சூழலில்தான் தற்போது லாவண்யா வழக்கில் பாரபட்சம் காட்டுவதாக கூறி ABVP மாணவர் அமைப்பினர் முதல்வர் ஸ்டாலின் வீட்டினை முற்றுகையிட்டனர் கத்தி படத்தில் எப்படி விஜய் தனக்கு கிடைத்த சிறு குழுவை கொண்டு கச்சிதமாக உரிய நேரத்தில் போராட்டம் நடத்தி மக்கள் கவனத்தை பெற்று வெற்றி பெறுவாரோ அதே போன்று மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒன்று கூடி ஒரு இடத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காவல்துறை தங்களை பிடிக்காத வண்ணம் உடனே ஓட்டம் எடுத்து முன்னேறியதும் நீதி வேண்டும் என எழுப்பிய கோசங்களும் கொஞ்ச நேரத்தில் முதல்வர் தரப்பையும் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் கவில்துறையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏன் லாவண்யா விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த ஏன் தமிழக அரசு அச்சம் கொள்கிறது, உண்மையில் காவல்துறை தொடங்கி பல்வேறு நபர்கள் இந்த விசாரணையில் சிக்குவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக லாவண்யா விவகாரத்தில் தமிழக அரசு போலி தன்மையை கடை பிடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் குற்றம் சுமத்தினர்.