தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை செய்ய தடையில்லை என்று உத்தரவிட்டதுடன் தமிழக அரசிற்கும் செம டோஸ் கொடுத்துள்ளது.
அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் அருகேயுள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஜனவரி 9ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதமாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரி மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,தமிழக காவல்துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக்கூறி இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை முருகானந்தம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில், தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை இல்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிரான தமிழக அரசின் இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மாணவின் தந்தை முருகானந்தத்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது இந்த வழக்கில் மேல் முறையீடு செய்த தமிழக அரசை நீதிமன்றம் கண்டித்துள்ளது குறிப்பாக லாவண்யா வழக்கை கௌரவ குறைச்சலாக எடுத்துகொள்ள கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் டோஸ் கொடுத்துள்ளது.
நீட் வழக்கிற்கு கூட உச்ச நீதிமன்றம் செல்லாத திமுக அரசு, லாவண்யா விவகாரத்தில் சிபிஐ விசாரணை செய்ய கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது, மேலும் லாவண்யா தற்கொலைக்கு காரணமான விடுதி வார்டன் சகாய மேரியை திமுக எம்எல் ஏ இனிகோ இருதயராஜ் சந்தித்து பேசியதும் சால்வை அணிவித்து வரவேற்று இருப்பதும் லாவண்யா வழக்கில் மாநில அரசின் போக்கை காண்பித்துள்ளது.
இதில் மற்றொரு முக்கிய விவகாரம் என்னவென்றால் வருகின்ற வாரமே சிபிஐ விசாரணை தொடங்க இருப்பதால் தமிழக காவல்துறை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் அரண்டு போயிருக்கிறார்களாம். இனிதான் இருக்கு கச்சேரி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
More Watch Videos