Tamilnadu

8 வயது சிறுமி செய்த அதிரடி "சாதனை" ..இப்போ சொல்லுங்க உண்மையான வீர பெண்மணி யார்?

Eight year old girl
Eight year old girl

8 வயதில் சிறுமி செய்த சாதனையை பட்டியலிட்டுள்ளார் பத்திரிகையாளர் கோகுல கிருஷ்ணன் சூர்யநாராயணன் அது பின்வருமாறு :-


2018 - ல் பிப்ரவரி 10ஆம் தேதி அதிகாலை 4:10 மணி அளவில் பயங்கர ஆயுதங்களுடனும், வெடிகுண்டுகளுடன் JeM தீவிரவாதிகள் ஜம்முவில் உள்ள சுஞ்சுவான் (sunjuwan) இராணுவ வீரர்களின் 36வது பிரிகேடியர் முகாமில் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அங்கு வசித்து வரும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உள்ள பகுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடுகின்றனர்.

ஹவில்தார் குருகு சத்யநாராயணா உதம்பூரில் உள்ள இடத்திற்கு வேலை சென்று இருந்த சமயம், அவர் மனைவி பத்மாவதி மற்றும் மூன்று பெண்பிள்ளைகளும், திவிரவாதிகளின் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்கின்றனர்.

இவர்கள் வீட்டு வெளிக்கதவை கையெறி குண்டுகளால் வெடிக்க வைத்து சிதிற செய்த தீவிரவாதிகள் உள்ளே நுழைய முற்படும் சமயம், “தன் குடும்பத்தினரை காக்க எட்டு வயது சிறுமியான ஹிமாபிரியா குருகு, தான் காயம்பட்ட போதிலும் ஓடி சென்று வாசற்காதவின் முன் நின்று,

தீவிரவாதிகள் ஹிமாவின் தலையில் துப்பாக்கி வைத்த போதும், 4 முதல் 5 மணி நேரம் வரை அவர்களுடன் போராடிப்பேசி, வீட்டின் உள்ளே யாரும் இல்லை என்று கூறி தன் தாய் மற்றும் சகோதரிகளை காப்பாற்றுகிறார்.

இந்த வீர சேவைக்காக கடந்த மாதம் 24 ஆம் தேதி நடந்த குடியரசு தின கொண்டாட்ட விழாவில், பிரதமர் நரேந்திரமோடி கையால் “பிரதான் மந்திரி பால புரஸ்கார் “ விருதும், பட்டயம் மற்றும் ஒரு லட்ச ரூபாய் காசோலை என காணொலி காட்சி வாயிலாக பெற்றார்.

தற்போது 12 வயது ஆகும் நம் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீககுளத்தை சேர்ந்த ஹீமா பிரியா குருகு பரிசு பெற்றது குறித்து கூறுகையில், “ஒரு ராணுவ வீரரின் மகளாகப் பிறந்தற்க்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் என் தந்தைதான் எனக்கு ரோல் மாடல் மற்றும் இன்ஸ்பிரேஷன்” என்று கூறினார்.

எட்டு வயது பெண் பிள்ளையும், பதினாறு அடி பாயும், உயிரை துச்சமென மதிக்கும் என தீவிரவாதிகளுக்கு பாடம் எடுத்து, என் போன்ற ஹீரோயின்கள் இருக்கும் வரை - நம் பாரதத்தின் புல்லைக்கூட புல்லுருவிகள் புடுங்க முடியாது என்று சொல்லாமல் சொன்ன ஹீமா பிரியாவுக்கு ஒரு "ராயல் சல்யூட்" வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிக்கூடத்தில் ஒரு பெண் மாணவர்கள் முன்பு கோஷம் எழுப்பினார் என அவருக்கு வீர பெண்மணி பட்டம் கொடுக்கிறார்கள் ஆனால் தீவிரவாதிகள் தலையில் துப்பாக்கி வைத்த நிலையிலும் அவர்களுடன் போராடி தனது குடும்பத்தினரை வீரத்துடன் காப்பாற்றிய பெண்மணி உண்மையில் வீர பெண்மணியா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.