தமிழக அரசு பள்ளியில் படித்த தமிழர் ஒருவர் தமிழக காவல்துறையின் உயர்ந்தபதவியில் அமர்ந்துள்ளார், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய காவல்துறை அதிகாரியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார், தமிழக அரசின் புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.தமிழகத்தின் தற்போதைய டி.ஜி.பி., திரிபாதியின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை முன்னிட்டு புதிய டி.ஜி.பி.,யை தேர்ந்தெடுக்கும் பணி ஏற்கனவே துவங்கி விட்டது.
ஒரு டி.ஜி.பி.,யின் பதவிக்காலம் முடிவடையும் முன்னரே, அடுத்த டி.ஜி.பி.,க்கான தகுதியுள்ள அதிகாரிகள் சிலரது பெயர்களை தேர்வு செய்து, அந்த பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தமிழக அரசு அனுப்பி வைப்பது வழக்கம் இந்நிலையில் தமிழக புதிய டி.ஜி.பி., தேர்வு குறித்த நடந்த ஆலோசனையின் போது தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டியலில் மூன்று பேரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டது.
இதில் சைலேந்திர பாபு தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அதிகாரப்பூர்வமாக நியமனம்செய்யப்பட்டார். சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார், தகுதி, சீனியாரிட்டி உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில், அந்த பட்டியலை பரிசீலிக்கும் உள்துறை மற்றும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள், அவர்களில் இரண்டு அல்லது மூன்று பெயர்களை இறுதி செய்து, தமிழக அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைப்பர்அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்து, புதிய டி.ஜி.பி.,யாக தமிழக அரசு நியமிக்கும் அதன் அடிப்படையில் புதிய டி ஜி பி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சைலேந்திர பாபுவை பொருத்துவரை இதுவரை கடமையுணர்வுக்கான இந்தியக் குடியரசுத்தலைவரின் விருது,உயிர் காத்த செயலுக்கு இந்தியப் பிரதமரின் விருது, வீரதீர செயலுக்கான தமிழக முதல்வரின் விருது , கடமை உணர்வுக்கான தமிழக முதல்வரின் விருது, சிறப்பு அதிரடிப்படையில் வீரதீர செயலுக்கான தமிழக அரசின் விருது,சிறப்பு பணிக்கான இந்தியக் குடியரசு தலைவரின் விருது ஆகிய உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.
பிரதமரின் மோடியின் கோரிக்கையை ஏற்று நீண்டதூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர். இந்நிலையில் சைலேந்திர பாபு அவர்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட மறு கணமே அவரது சாதியை குறிப்பிட்டு பாராட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றனர்.
சக தமிழர்களாக வாழ்த்துக்கள் கூறுவது நல்லதுதான் அதற்காக அவரது சாதியை பொது வெளியில் குறிப்பிட வேண்டுமா அது தேவைதானா எனவும் சிலர் பதில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.