தமிழக டிஜிபியாக பதவி வகித்து வந்த டிகே ராஜேந்திரனின் பணிக்காலம் முடிவடைந்த போது கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட ஒழுங்கு டிஜிபியாக ஜே கே திரிபாதியை தமிழக அரசு நியமித்ததுஇவரின் பதவிக்காலம் முடிந்தது
இதையடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பணி மூப்பு அடிப்படையில் சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார், சிங், கந்தசாமி உள்ளிட்டோரில் இருந்து ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது .இவர்களது பெயர்கள் அடங்கிய கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொடுத்து ஒப்புதல் வாங்க தமிழக தலைமைச் செயலாளர் வெ இறையன்பு டெல்லி சென்றார்.
6 பேரின் கோப்புகளில் இருந்து உள்துறை அமைச்சரகம் ( மத்திய தேர்வாணயம் ) மூவரை தேர்வு செய்து தமிழக அரசிற்கு அனுப்பி வைக்கும்.அந்த 3 பேரில் யாரேனும் ஒருவரை டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்து கொள்ளலாம். அதற்கான கோப்புகளையும் மத்திய அரசிற்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
ஒரு வேளை தமிழக அரசின் தேர்விற்கு மத்திய தேர்வாணயம் ஒப்புதல் அளிக்கவிட்டால், மத்திய அரசு தேர்வு செய்த மற்ற இருவரில் இருந்து ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்து மீண்டும் அனுப்பி உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெரும், இதன் பொருள் என்னவென்றால் சட்டம் ஒழுங்கு காவல்துறைக்கு தலைமை ஏற்கும் நபர் மத்திய மாநில அரசுகளின் கீழ் இயங்குவது என்பதே.
இத்தனை முக்கியத்துவம் கொண்ட பதவியில் தேர்வு செய்யப்படும் நபர் மத்திய மாநில அரசுகளின் ஒருமித்த நம்பிக்கையை பெற்றவறாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம், தற்போது புதிய டிஜிபி-யாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, கிளீன் இமேஜ் கொண்டவர் மேலும் பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றவராகவும் உள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில், சைலேந்திர பாபு, கரன் சின்ஹா, சஞ்சய் அரோரா, ஆகியோர் பெயர்களில் ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என தமிழக அரசிற்கு கொடுத்துள்ளனர், அதன் அடிப்படையில் சைலேந்திரபாபுவை இறுதி செய்துள்ளது தமிழக அரசு, கந்த சாமியை தேர்வு செய்யவே ஸ்டாலின் முயன்றதாகவும், குறிப்பாக குஜராத் அரசியலில் அமிட்ஷா மீதான வழக்கை காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்டு கைது செய்தவர், மேலும் திராவிட கொள்கை கொண்டவர் என்ற அடிப்படையில் அவரை தேர்வு செய்ய நினைத்து இருக்கிறார்.
ஆனால் உள்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை அறிந்து லாபி செய்வதை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது, இதையடுத்து சைலேந்திர பாபுவை இறுதி செய்துள்ளது தமிழக அரசு என உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மத்திய மாநில அரசுகளின் நம்பிக்கையை பெற்ற சைலேந்திர பாபு தனது பதவி காலத்தில் பொதுவான நபராக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பே தற்போது அனைவர் இடத்திலும் உள்ளது.