தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தல் வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன, இந்நிலையில் நேற்று மாலை 7 மணிக்கு, தமிழகத்தை சேர்ந்த சில ஊடகங்கள் மற்றும் ஆங்கில ஊடகங்கள், மற்றும் தனியார் ஏஜென்சிகள் தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என கணித்துள்ளது.தமிழகத்தில் திமுக கூட்டணி 160 முதல் 172 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்று சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி 160-ல் இருந்து 172 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணி 58-ல் இருந்து 70 இடங்கள் வரையிலும், அமமுக கூட்டணி 0 முதல் 5 இடங்கள் வரையிலும் வசப்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.சிவோட்டர்ஸ், ஏபிபி சேனல் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளின் விவரம் தமிழகம் 234/234: (பெரும்பான்மைக்கு 118)
திமுக கூட்டணி: 160 - 172
அதிமுக கூட்டணி: 58 - 70
அமமுக கூட்டணி: 0 - 4
மநீம கூட்டணி: 0
நாதக - 0
பிற - 0
ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.டுடேஸ் சாணக்யா வெளியிட்டுள்ள கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி: 164 - 186,அதிமுக கூட்டணி: 46 - 68, அமமுக கூட்டணி: 0,மநீம கூட்டணி: 0, நாதக - 0,பிற - 0 164 முதல் 186 இடங்களை கைப்பற்றும் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக கால் பதிக்குமா என்ற கேள்வி எழுப்ப பட்டுவரும் நிலையில், தாராபுரம், அரவக்குறிச்சி, கோவை தெற்கு, நாகர் கோவில், திருநெல்வேலி ஆகிய 5 இடங்கள் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளின் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.