Politics

என்ன இவர்கள் இருவர் மட்டும் இப்படி கருத்து கணிப்பை வெளியிட்டு விட்டார்கள் திமுக தலைமை அதிர்ச்சி!!

என்ன இவர்கள் இருவர் மட்டும் இப்படி கருத்து கணிப்பை வெளியிட்டு விட்டார்கள் திமுக தலைமை அதிர்ச்சி!!
என்ன இவர்கள் இருவர் மட்டும் இப்படி கருத்து கணிப்பை வெளியிட்டு விட்டார்கள் திமுக தலைமை அதிர்ச்சி!!

திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றும் என்று ஆங்கில முன்னணி ஊடகங்கள், ஏஜென்சிகள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்ட சூழலில் இருவருடைய கருத்து கணிப்பு மட்டும் திமுக அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று மாலை முடிவடைந்த நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் வெற்றி பெற போவது யார் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின, அதில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தன.

இதுவரை தமிழக தேர்தல் நிலவரங்களை எந்த ஆங்கில மற்றும் தமிழக ஊடகங்களும் சரியாக கணித்தது இல்லை, கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக ஆட்சி அமையும் என குறிப்பிட்டன ஆனால் மீண்டும் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமையும் என ஆங்கில ஊடகங்கள் தெரிவித்து இருப்பது திமுகவினருக்கே சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணி 160 முதல் 172 இடங்களுடன் ஆட்சி அமைக்கும் என்று சிவோட்டர்ஸ் - ஏபிபி சேனல் தனது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.திமுக கூட்டணி 160-ல் இருந்து 172 இடங்கள் வரையிலும், அதிமுக கூட்டணி 58-ல் இருந்து 70 இடங்கள் வரையிலும், அமமுக கூட்டணி 0 முதல் 5 இடங்கள் வரையிலும் வசப்படுத்தும் என்று கணிக்த்துள்ளதுடுடேஸ் சாணக்யா 

ரிபப்ளிக் சேனல், சி.என்.எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தமிழகத்தில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா மூலம் நடத்திய கருத்து கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 101 இடங்கள் கிடைக்கும் எனவும் திமுக கூட்டணிக்கு -109 இடங்கள் கிடைக்கும் எனவும் இழுபறியில் 24 இடங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜங்கிபாத் -இந்தியா டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் திமுக கூட்டணி 130-110 இடங்கள் கிடைக்கும் எனவும், அதிமுக கூட்டணிக்கு 102-123 இடங்கள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது, இந்த நிறுவனம் மட்டுமே கடைசியாக நடைபெற்ற ஐதராபாத் தேர்தல் முடிவுகளை சரியாக கணித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜங்கிபாத் மற்றும் பாண்டேவின் சாணக்யா வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள் திமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது திமுக குறைந்தது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 140 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே நிர்வாக சிரமமின்றி ஆட்சி நடத்தலாம் என திமுக தலைமை எண்ணிய நேரத்தில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தே பெரும்பான்மை பெறுவது கடினம் என்ற தகவல் ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது, இதே போல் அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளும் திமுக ஆட்சிக்கு வரும் என தெரிவித்தன ஆனால் நடந்தது வேறு, இதை நம்பலாமா வேணாமா என தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஆலோசனை நடத்தியுள்ளார் ஸ்டாலின், மேலும் தேர்தல் முடிவுகள் இழுபறியாக அமையலாம் என்ற ஒரு தகவலும் கிடைத்து இருப்பதால் வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை இன்று சந்தித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒரு வேலை திமுக தனி பெரும்பான்மை பெறவில்லை என்றால், ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் அமருவது சிரமம் எனவும் கூறப்படுகிறது.