Cinema

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? சட்டத்தை மீறிய இர்பான் சட்டம் பாயுமா?

Irfan
Irfan

youtube மூலம் பிரபலமடைந்த இர்ஃபானுக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை.இவர் உள்ளூர் முதல் வெளிநாட்டு உணவுகள் வரை சாப்பிட்டு விமர்சனம் செய்தே பிரபலமானவர்.அதிலும் சாப்பிடும்போது இவர் கொடுக்கும் ரியாக்ஷன் அதிகமாக மீம்ஸ்களாக இணையத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்திருந்தது. இர்ஃபானுக்குச் சொந்தமான சொகுசு கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவமும் நடந்திருக்கிறது.இந்தியாவில் சட்டவிரோதமாக கருதப்படும் ஒரு செயலை இர்பான் செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


யூடியூபர் இர்ஃபான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இர்ஃபானுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அவர் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்ட்டி நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார் இர்ஃபான் சட்டவிரோதமாக செய்திருக்கும் இந்த இந்த செயல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அந்தக் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் சென்டரில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தால் அந்த ஸ்கேன் சென்டரை இழுத்து மூடி சீல் வைத்து விடுவார்கள். அந்த மருத்துவருக்கும் மிகப்பெரிய தண்டனை உண்டு. ஆனால், வெளிநாடுகளில் என்ன குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதை அறிவித்து விடுவார்கள்.

இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் யூடியூபர் இர்ஃபான் குடும்பத்துடன் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கே பாலினத்தை அறிவிக்கும் நிகழ்ச்சியை கொண்டாடிய வீடியோவை தற்போது தனது யூடியூப் பக்கத்தில் இர்ஃபான் வெளியிட்டுள்ளார் துபாயில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதை இவர் கொண்டாடும் விதமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் மட்டும் பார்ட்டி வைத்திருக்கிறார். இந்த பார்ட்டியில் பிக் பாஸ் மாயா கலந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கு பிறக்கப் போவது பெண் குழந்தை என்று மகிழ்ச்சியுடன் இர்பான் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்பதற்கு இது உதாரணம்.உள்ளூரோ வெளியூரோ வெளிநாடோ மேலும்  இது சமூகத்திற்கு ஒரு தவறான வீடியோ. இந்தியாவில் பாலினம் பார்க்க தடை செய்ததின் காரணம் சிசு கொலைகளை தவிர்ப்பதற்குத்தான். சட்டத்தை மீறி துபாயில் சென்று ஸ்கேன் செய்து பார்த்தல் துபாயில் குடியேறலாமே ஏன் இங்கு இந்தியாவில் வசிக்க வேண்டும்.பெண்ணின் வயிற்றில் கருவில் இருப்பது ஆனா பெண்ணா என்பது சொல்வது கிரிமினல் குற்றமாகும் இதை துபாயில் போய் பார்த்துவிட்டு எப்படி பொதுவெளியில் சொல்வது இர்பான் மீது கிரிமினல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சட்டபூர்வமாக இர்பான் மீது சட்டம் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.