Tamilnadu

தமிழகத்தில் "4-MPகள்" பதவிக்கு ஆபத்து ஒருவர் கடலூர் MP..மற்ற மூவர் யார் என்ன விவகாரம்?

dmk mp
dmk mp

தமிழகத்தில் ஆளும் திமுகவை சேர்ந்த நான்கு MP-கள் பதவிக்கு ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன இதுகுறித்து TNNEWS24-க்கு கிடைத்த தகவல்கள் பின்வருமாறு :-


கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ், பணிக்கன் குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும், கடலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டி.வி.ஆர். முந்திரி தொழிற்சாலையில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி அன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்பு பிணமாக கண்டு எடுக்கப்பட்டார் இதில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 

கொலை வழக்கு பதிவு செய்து ஆளும் கட்சி mp ரமேஷ் தற்போது சிறையில் இருக்கிறார், போதுமான ஆதாரங்கள் இருப்பதால் நிச்சயம் ஆளும்கட்சி எம்பி ரமேஷ் மீது விரைவில் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தங்களது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யலாம் எனவும், அதன் அடிப்படையில் ரமேஷ்சுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தாலும் ஆச்சர்ய பட வாய்ப்பு இல்லை எனவே ரமேஷ் பதவி பறிபோவது நிச்சயம்.

இவர் தவிர்த்து ஆளும் கட்சியின் அமைச்சர் பொன்முடி மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான "கௌதம சிகாமணி" மீது அமலாக்க பிரிவு தொடங்கிய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது., கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறையினர், கௌதம சிகாமணிக்குச் சொந்தமான சொத்துகளை அதிரடியாக முடக்கியிருக்கிறார்கள்.2008-ம் ஆண்டு இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் ஒரு தனியார் நிறுவனத்தில், ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்குப் பங்குகளை வாங்கி முதலீடு செய்திருக்கிறார் கெளதம சிகாமணி. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் யூனிவர்சல் பிசினஸ் வெஞ்சர் என்ற நிறுவனத்திலும் 55,000 அமெரிக்க டாலரை முதலீடு செய்திருக்கிறார்.

‘இந்த முதலீடுகள் மூலம் சுமார் 7,06,57,537 ரூபாய் லாபம் ஈட்டிய கௌதம சிகாமணி, இதை அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்’ என்பதே அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இதன் அடிப்படையில் அந்த லாபத் தொகைக்கு ஈடாக அவரது வீடு, நிலம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.இந்த வழக்கின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டது என்ற செய்தி TNNEWS24-க்கு கிடைத்துள்ளது, அமலாக்க துறை போதுமான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை முழுவதுமாக திரட்டி வைத்துள்ளது, எனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டது உறுதியானது என்கின்றன, ஆவனங்களின் அடிப்படையில் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் இந்த தீர்ப்பின் அடிப்படையில் மக்களவை உறுப்பினர் பதவி பறிபோகும் என்று உறுதியாக நம்புகிறது  விசாரணை நிறுவனங்கள்.

2 ஜி வழக்கில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ள சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளது , இந்த வழக்கில் தொடர்புடைய நீரா ராடியாவிற்கு டெல்லி பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது, மேலும் பல்வேறு மட்டங்களில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

மேலும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 28 கோடி சொத்து சேர்த்ததாக அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்த வழக்கு குறித்து ஆ ராசா மீது விசாரணை நடத்த மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது சிபிஐ, இதையடுத்து மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இதில் 2ஜி வழக்கில் இருந்து ராசா விடுதலை ஆனாலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, கடலூர் எம்பி ரமேஷ் மீதான கொலை வழக்கு, கௌதமசிகாமணி மீதான அமலாக்கத்துறை வழக்கு, ஆ ராசா மற்றும் கனிமொழி மீதான 2ஜி வழக்கு, மேலும் ஆ ராசா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நடைபெறும் வழக்கு ஆகியவற்றின் மூலம் மேற்கண்ட நான்கு மக்களவை உறுப்பினர்கள் பதவிக்கு ஆபத்து உண்டாகியுள்ளது. 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னராக இந்த வழக்குகளில் அதிரடி தீர்ப்புகள் வெளியாகும் என்பதே நமக்கு கிடைத்த பிரத்தியேக தகவல்.