இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட ட்விட்டர் பதிவின் மூலம் சர்ச்சையான பட விவகாரம் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வரை சென்றுள்ளது, சில நாட்களுக்கு முன்னர் பா ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கெளதம் மேனன் நடிக்கும் அன்புசெல்வன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என கெளதம் மேனன் இடம்பெற்ற போஸ்டரை வெளியிட்டார் ரஞ்சித்.
இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் தான் அப்படி எந்த படத்திலும் நடிக்கவில்லை, இந்த செய்தி உண்மை இல்லை எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என ரஞ்சித்திற்கு பதில் கொடுத்தார் கெளதம் மேனன் அதை தொடர்ந்து தான் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரை நீக்கினார் ரஞ்சித்.
இல்லாத படத்தை இருப்பது போல் ஆக்கி யாரிடமோ பணத்தை ஏமாற்றும் முயற்சி நடக்கிறதா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர், இந்தவிவாகரம் சமூக வலைத்தளங்களை தாண்டி, ஊடகங்களிலும் வெளியானது, இதை அடித்து
இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று கவுதம் மேனன் கூறியதை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவை நீக்கினார் பா.ரஞ்சித்.இந்நிலையில் அன்பு செல்வன் படக்குழுவினர் கெளதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை . வினா என்கிற படத்தின் பெயர் அன்பு செல்வன் என்று மாற்றப்பட்டதே அனைத்து குழப்பத்திற்கும் காரணம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் கெளதம் மேனன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார் அதில், ஜெய்கணேஷ் இயக்கத்தில் வினா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் (2018 ஒப்புக்கொண்டேன் சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன்.
அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிக்க முடியும் என தெரிவித்தேன்,
ஆனால் அதையும் மீறி எனது சம்மதம் இல்லாமல் பட குழு ஒப்பந்தத்தை மீறி படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் பெயரை மாற்றி விளம்பரம் செய்து வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். பா. ரஞ்சித் போட்ட ஒற்றை ட்விட்டால் ஒரு படமே பாதியில் நின்ற சம்பவம் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.