Cinema

யாரிடம் விலை போயுள்ளார் "சூர்யா" பொட்டில் அடித்தார்போல் அடித்து சொன்ன தேவநாதன் யாதவ்!

suriya and Devanathan Yadav
suriya and Devanathan Yadav

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்,மேலும் முற்போக்கு என்ற பெயரிலும், படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர் எனவும் சூர்யாவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட முழுமையான அறிக்கை பின்வருமாறு :- உண்மைக்கதை என்ற அடிப்படையில் வெளியான, 'ஜெய்பீம்' திரைப்படம், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை பெற்றது. நல்ல படைப்பையோ அல்லது படைப்பாளியையோ, நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. வரலாற்றை திரைப்படமாக்கும் போது, உள்ளது உள்ளபடி எடுக்க வேண்டும். அதில் பெயர் மாற்றம், காட்சி மாற்றம், கதை மாற்றம் என்று எதையும் செய்யக்கூடாது.

அதற்கு அப்பாற்பட்டு, ஜெய்பீம் திரைப்படத்தில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாக மாற்றி, பின் அதை குருவாக காட்சிப்படுத்தி உள்ளனர். வன்னியர் சமுதாயத்தின் அக்னி கலச படம் பொறித்த காலண்டரை வைத்து, இரு சமூகத்தினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்த முயன்றுள்ளனர். இதற்கு கண்டன குரல் எழுந்ததும், அந்த சமுதாய காலண்டரை மாற்றி, மகாலட்சுமி படம் பொறித்த காலண்டரை வைத்து, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி உள்ளனர்.

முற்போக்கு என்ற பெயரிலும், படைப்பு சுதந்திரம் என்ற பெயரிலும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தையும், காட்சிப்படுத்தலையும், திரைப்படத் துறையினரும், திராவிட சித்தாந்தவாதிகளும் தொடர்ந்து செய்து, அன்னிய நாட்டு கைக்கூலிகளிடம் விலை போகின்றனர்.படைப்பு சுதந்திரம் என்ற பெயரில், அந்தோணிசாமி என்ற பெயரை குருமூர்த்தியாகவும், ஹிந்து மத கடவுளையும் தவறாக சித்தரிப்பது கண்டனத்திற்கு உரியது.

'ஜெய்பீம்' படத்திற்கு ஆதரவாக அறிக்கை விடுகிறோம் என்ற போர்வையில், திரைப்படத் துறையினர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்களுக்கு எதிராக, எப்போதும் செயல்படும் போக்கை, நடிகர் சூர்யா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்  எனவும் தேவநாதன் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.