Cinema

லெப்ட் ரைட் வாங்கிய கஸ்தூரி அம்பியாக இருந்து அந்நியனாக கு(ரு)றுக்கே பாய்ந்த செந்தில்!

kasthuri and senthil
kasthuri and senthil

தனியார் ஊடகம் ஒன்று ஜெய்பீம் திரைப்படம் உண்டாக்கிய சர்ச்சை குறித்து விவாதம் நடத்தியது இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தனது கருத்தை பதிவு செய்தார்.


ஊடகங்கள் உண்டாக்கிய அழுத்தம் காரணமாக தான் ஜெய்பீம் திரைப்படம் பார்த்ததாகவும், ஆனால் ஜெய்பீம் திரைப்படத்தை படமாக பார்த்தால் அருமையாக இருப்பதாகவும், அதில் எந்த வித சர்ச்சையும் இல்லை ஹைதராபாத்த்தில் உள்ள என் அண்டை வீட்டார் கூட படம் அருமையாக இருப்பதாக கூறினார் என கஸ்தூரி ஜெய்பீம் திரைப்படம் குறித்து பாசிட்டிவ் கமெண்ட் செய்த போது தலையை மட்டும் ஏறத்தாழ 2.5 நிமிடம் வரை எந்த வித குறுக்கீடும் இன்றி கஸ்தூரி கருத்தை கேட்டுவந்தார் செந்தில்.

அந்நியன் படத்தில் வரும் அம்பி கதாபாத்திரம் போன்று முக பாவனைகளை வைத்து இருந்தார், இந்த சூழலில்தான் கஸ்தூரி ஜெய்பீம் திரைப்படத்தில் உள்ள குறியீடு அரசியல் குறித்து ஓபன் டால்க் கொடுக்க தொடங்கினார், குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ஏன் படத்தில் சர்ச்சையை உண்டாக்கும் விதமாக காட்சிகள் வைத்தார்கள், அந்தோனிசாமி என்ற பெயரை மாற்ற வேண்டிய காரணம் என்ன. என கேட்டார்?

அவ்வளவுதான் ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி பேசும்போது அம்பியாக அமைதியாக இருந்த செந்தில் எதிர் விமர்சனம் வைத்த போது அந்நியன் போன்று மாறி இல்லை மேடம் நீங்கள் சட்டம் பயின்றவர் சில சட்ட வல்லுநர்கள் என்ன சொன்னார்கள் என்றால் அந்தோனிசாமி மற்றும் பார்வதி அம்மாள் இருவரும் உயிரோடு இருக்கிறார்கள் சட்ட சிக்கல் வரும் என்ற காரணத்தால் பெயரை மாற்றி இருக்கிறார்கள் என துணை கேள்வி கேட்டார்.

அதற்கு கஸ்தூரி அதெல்லாம் சரி அந்தோணி சாமி என்பதற்கு பதிலாக அவர் சமூகத்தை சேர்ந்த வேறு அடையாளத்தையோ அல்லது அவர் மத அடையாளத்தையோ வைத்து இருக்கலாமே இது தெரியாமல் செய்த சர்ச்சை இல்லை எனவும் மேலும் எந்த நீதிமன்றத்திலும் குரு மூர்த்தி என்ற முழு பெயரை சுருக்கி குரு குரு என்று கூறமாட்டார்கள்.

நானும் சட்டம் படித்தவள்தான் என வெளுத்து எடுத்து விட்டார் கஸ்தூரி மொத்தத்தில் நடிகர் சங்கம் இந்த விஷயத்தில் ஏன் தலையிடனும் என்று அமைதியாக இருக்கிறது என செந்தில் கேள்விகளுக்கு பதில் அளித்தார் கஸ்தூரி மொத்தத்தில் ஜெய்பீம் திரைப்படத்தில் சொல்ல பட்ட குறியீடுகள் குறித்து லெப்ட் ரைட் வாங்கிவிட்டார் கஸ்தூரி. விவாத வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.