
2015 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான காவிய ஃபேன்டஸி ஆக்ஷன் திரைப்படம் தான் பாகுபலி!! இத்திரைப்படம் ஆனது எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்கா மீடியா ஒர்க்ஸின் கீழ் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி போன்றோரின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். டோலிவுட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வந்தது. தற்போது பாகுபலி 1 பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதனை தொடர்ந்து பாகுபலி 2 என்ற திரைப்படமும் வெளியாகி அந்த கதை நிறைவு பெற்றது. பாகுபலி 1ல் கதாநாயகன் பல சாகசங்களை பின்தொடர்ந்து காதல் அவந்திகாவை மீட்டெடுத்தார். அதன் பிறகு ராணி தேவசேனா பல்லவ தேவனின் கொடுங்கோள் ஆட்சியில் கைதியாக அடைபட்டு இருப்பார். இத்துடன் பாகுபலி 1 பாகமானது நிறைவுக்கு வந்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து பாகுபலி 2 தி கன்க்ளூஷனில் கதை வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் கதையினை ராஜமௌலியின் தந்தையான வி. விஜயேந்திர பிரசாந்த் எழுதியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் சிவகாமி பிரச்சினையை கடக்கும் பொழுது அவர் மூழ்கிய படி குழந்தையை மட்டும் கையில் ஏந்திய படியும் திரைப்படமானது ஆரம்பமாகும். திரைப்படத்தில் முதலில் சிவகாமி பற்றியும் அதன் பிறகு கட்டப்பாவை பற்றியும் மிகவும் ஆர்வமாக கதை கொண்டு போகப்பட்டு இருக்கும். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வந்தது. அதன்பிறகு ஜூலை மாதம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் இப்படம் வெளியிடப்பட்டது.
ராணா டக்குபதி , அனுஷ்கா ஷெட்டி , தமன்னா பாட்டியா , ரம்யா கிருஷ்ணா , சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோருடன் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை வியப்பில் வாழ்த்தியுள்ளார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. அதிக அளவில் ரசிகர்களையும் பெற்று வந்த நிலையில் 600 முதல் 650 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் உடன் இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பாகுபலி திரைப்படத்தை வைத்து பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடர் ஒன்று தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ளது.
வருகின்ற 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த கிராபிக்ஸ் தொடரை இந்தியா மற்றும் ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இது குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் அமைந்திருக்கும் கதாபாத்திரமான அமரேந்திர பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் முகமானது பிரபல கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியின் சாயலில் இருக்கிறது என்று அனைவரும் யோசித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து இந்த கதாபாத்திரமானது தோனி போன்ற முகத்தை கொண்டிருப்பது ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் இவை அனைத்திற்கும் ஒரே பதிலில் ராஜமவுலி பதில் அளித்துள்ளார்!! அது என்னவென்றால்!!!
வெளியாகப் போகும் பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷனில் நரேந்திர பாகுபலி கிரிக்கெட் வீரர் தோனியை போல இருப்பதே ஏன் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வியை எழுப்பியதை தொடர்ந்து அதற்கு ராஜமவுலி, " என்னைப் போலவே இதனை உருவாக்கியவர்களும் தோனியின் ரசிகர்களாக இருக்கலாம்!!" சிரித்தபடியே பதிலளித்து உள்ளார். பாகுபலி பெரிய அளவில் வெற்றி பெற்றதை போலவே இந்த கிராபிக்ஸ் தொடரும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.