விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வார்த்தைகள் திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சென்னை ஈவேரா சாலையில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் எதிரே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மூன்றாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். மேலும் இருசக்கர வாகத்திற்கு மாலை அணிவித்து மேளம் அடித்து நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர். பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஆர்பாட்டம் நடத்தி வருகிறோம்.
விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அது ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என்பது எங்களது முதல் கோரிக்கை, கொரோனா நிவார நிதியுதவியாக தலா ஒரவ்வொரு குடும்பத்தினருக்கும் 7500 வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு அதற்கான போதிய நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டாமல் போதிய தடுப்பூசி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்திற்கு உடனடியாக மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். தவறான பொருளாதார கொள்கையாலும் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டு பொதுமக்களை பாழங்கிணற்றில் தள்ளியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்டுகளுடன் தொடர்ந்து களத்தில் இணைந்திருந்து தீய சக்திகளை துரத்தி அடிப்போம் என அவர் தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரிவாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
திருமாவளவன் எங்குமே நேரடியாக மாநில அரசை குற்றம் சுமத்தவில்லை, ஆனால் பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசிற்கு இணையாக தமிழக அரசும் வரி விதிப்பது, தற்போதுதான் தமிழக மக்களுக்கு அதிகம் தெரியவந்துள்ளது, குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலையை 5 ரூபாய் குறைப்போம் என வாக்குறுதி அளித்தனர் ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை.
இதை கண்டித்து பாஜக அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எப்போது பெட்ரோல் விலையை குறைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர், இந்தசூழலில் மேலும் சிக்கலை உண்டாக்கும் விதமாக கம்யூனிஸ்ட் களுடன் சேர்ந்து திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபடுவது நேரடியாக திமுக அரசாங்கத்தை எதிர்க்காமல் மறைமுகமாக எதிர்ப்பை உண்டாக்குவதாக திமுகவினர் அறிந்துள்ளனர்.
திமுகவிற்கு எதிராக நீட் ரத்து, மின்தடை, பெட்ரோல் விலை உயர்வு, கட்டுமான பொருள்கள் விலை உயர்வு என பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டது ஸ்டாலினின் ஆட்சியின் அடிமடியில் கைவைக்கும் செயல், வெற்றிக்கு காரணமான கட்சிக்கே துரோகம் செய்யலாமா எனவும் திமுக ஆதரவாளர்கள் முகநூலில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து துரத்தி அடிப்போம் என திருமாவளவன் சொன்னது மத்திய அரசையா இல்லை மாநில அரசையா என்ற கேள்வி எழுந்துள்ளது.