தமிழகம் வரும் பிரதமர் பிரதமர் மோடியை பிரபல நடிகர் தனியே சந்தித்து பேச நேரம் கேட்டு இருக்கும் தகவல் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டுநாள் சுற்றுப்பயணமாக இன்று மாலை தமிழகம் வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பயணத்திட்டம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5.45 மணிக்கு ஐஎன்எஸ் கடற்படை விமானத் தளத்திற்கு செல்கிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பயணிக்கும் பிரதமர், மாலை 6 மணிக்கு நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு வருகை தருகிறார்.
நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 6 மணிக்கு 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, சாலை மார்க்கமாக பயணித்து, இரவு 7.50 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் அன்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை காலை சாலை மார்க்கமாக பயணித்து அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர், காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக பயணிக்கும் பிரதமர் காலை 11.50 மணிக்கு சென்னை விமான நிலையம் செல்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி மீண்டும் அகமாதபாத் திரும்பி செல்கிறார்.
ஆளுநர் மாளிகையில் தங்கும் பிரதமரை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக மாநில நிர்வாகிகள், முன்னாள் நீதிபதி என பல தரப்பிலும் நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது, இதில் பிரதமர் பலருக்கும் நேரம் ஒதுக்கி இருக்கிறார், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் பிரதமரை சந்தித்து பேச நேரம் கேட்டதாகவும் அவருக்கு பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்கியதா என்பது இன்று மாலை தெரிந்துவிடும் என அந்த நடிகரின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகரின் குடும்பமே ஒரு நேரத்தில் மத்திய அரசின் திட்டங்களை பல்வேறு நிலைகளில் விமர்சனம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சூழலில் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டே பிரதமரை சந்திக்க பிரதமர் அலுவலகம் அந்த நடிகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நேரம் ஒதுக்குமா? இல்லையா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.