Tamilnadu

தீபாவளி எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரியை பூசிய சுவாரஸ்ய சம்பவம் வெளியானது !

ramki ashok latha
ramki ashok latha

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கடந்த ஆண்டு இல்லாத அளவாக இந்த முறை பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் அண்டை வீட்டாருடன் இணைப்புகளை வழங்கியும் கோலாகலமாக தீபாவளியை கொண்டாடியுள்ளனர் மக்கள் இதில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.


சென்னை தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராம்கி அவரது இரு நண்பர்கள் அசோக், ராஜேஷ் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள், மூவரும் சரியாக 6 மணிக்கு  காரில் தாம்பரம் வழியாக பூந்தமல்லி பை பாஸ் வழியாக அம்பத்தூர், ஆவடி சென்று அங்கிருந்து திருவள்ளூர், ஸ்ரீ பெரம்பத்தூர் வழியாக மீண்டும் தாம்பரம் திரும்பி வந்து பயணத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் நேற்று அவர்கள் TNNEWS24 டம் பகிர்ந்து கொண்ட தகவல் சற்று வித்தியாசமாக இருந்தது, நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி கொடுத்து இருந்தது, இந்த சூழலில் மக்கள் அதனை பின்பற்று கிறார்களா என யோசனை செய்த சூழலில் தான்.., ஆச்சர்யம் காத்து இருந்தது.

தாம்பரத்தில் தொடங்கி திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் வழியாக மீண்டும் தாம்பரம் வந்த தாமதமான 8 மணி நேர பயணத்தில் 5 நிமிட இடைவெளி இல்லாமல் பட்டாசு சத்தம் கேட்டு கொண்டே இருந்தது, பலர் கடந்த ஆண்டை காட்டிலும் பட்டாசு அதிமாக வெடித்தனர் குறிப்பாக சென்னையை அடுத்த வேப்பம்பட்டு எனும் ஊரை நாம் கிராஸ் செய்தபோது வயதான முருகேசன் லதா ( சுமார் 80 வயது இருக்கும் )

தங்கள் பேரன் பேத்திகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர், அருகில் சென்று அவரிடம் பேச்சுக்கொடுத்தோம், இந்த வயதில் பட்டாசு வெடிப்பதால் உங்களுக்கு பாதிப்பு இல்லையா? நீங்களே குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்க கற்று கொடுக்கலாமா என அவரின் பதில் என்னவாக இருக்கும் என அறிய கேள்வி கேட்டோம்.

அதற்கு முருகேசன் மனைவி லதா சட்டென பதில் அளித்தார், ஆமா இந்த பஸ் கார், சாராயத்தில் வராத நோவு... பட்டாசு வெடிக்கிறதால வர போதா.. போப்பா, இப்படி ஒன்னு ஒண்ணா சொல்லித்தான் புள்ளைங்களுக்கு சொந்தம்னா என்ன பந்தம்னா என்னன்னே தெரியாம போச்சு.. ஒருநாள் பட்டாசு வெடிப்பதால் குடியா முழுவ போது என எங்களை வட சென்னை பாசையில் கடிந்தார்.

சாராயம் குடிக்கிறான் அவனை குடிக்காதான்னு சொல்ல முடில வந்துடீங்க பட்டாசு வெடிப்பதை கேள்வி கேட்க என சூடாக பதில் அளித்தார் லதா பாட்டி அப்போது கையில் வைத்திருந்த ஸ்வீட் பாக்ஸ்ஸை அவரிடம் கொடுத்துவிட்டு ஹாப்பி தீபாவளி என கூறிவிட்டு இனியும் இங்கு நின்றால் லதா பாட்டி ஆவேசமாவார் என உணர்ந்து கொண்டு நடையை கட்டினோம்.

இந்த பாமர மக்களின் மன நிலைதான் நாங்கள் பயணம் செய்த பகுதி முழுவதும் தெரியவந்ததது, மொத்தத்தில் யாரெல்லாம் பட்டாசு வெடிக்காதீர்கள்.. தீபாவளி தமிழர் பண்டிகையே இல்லை என சொல்லி வந்தார்களோ அவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கும் ஆச்சர்யம்தான் அரங்கேறியுள்ளது என TNNEWS24-டம் தகவலை பகிர்ந்தார் ராம்கி.

லதா பாட்டி என்பவர் பட்டாசு வெடிப்பது குறித்து சொல்லிய தகவல் யாரெல்லாம் தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என சொன்னார்களோ அவர்களுக்கும், பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் என கூறியவர்களுக்கும் முகத்தில் கரியை பூசிய சம்பவமாகவே பார்க்க படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட திராவிட கழகத்தலைவர் வீரமணி தீபாவளி ஆயுத பூஜை இன்னும் பிற இந்துக்கள் பண்டிகையை பெயர்களை குறிப்பிட்டு இந்த பண்டிகை தமிழர் பண்டிகை இல்லை என கூறினார் ஆனால் ஒட்டு மொத்த தமிழர்களும் தீபாவளி எங்கள் திருநாள் அப்படித்தான் உற்சாகமாக கொண்டாடுவோம் என பட்டாசு வெடித்து தங்கள் மனநிலையை தெரிவித்துவிட்டனர்.