Cinema

இந்த பதிலடி தேவையா நெல்சன்....போட்டு தாக்கிய பொன்னியின் செல்வன் கச்சேரி...!

Ponniyin selvan
Ponniyin selvan

வரலாற்று திரைப்படங்களை எடுப்பது என்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்றாலும் அதனால் பஞ்சாயத்தும் தொடங்கி விடும் அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர், இயக்குனர் வெற்றி மாறன் இராஜ இராஜ சோழனை இந்துவாக மாற்றும் முயற்சி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.


இந்த சூழலில் வெற்றி மாறனுக்கு ஆதரவாக மறைமுகமாக கருத்து தெரிவித்து வாங்கி கட்டி இருக்கிறார் தனியார் ஊடகத்தில் பணியாற்றிய நெல்சன், இவர் அவரது முகநூல் பக்கத்தில், எந்த மாமன்னனுக்கும் வானத்திலிருந்து காசு கொட்டவில்லை. மந்திரத்தில் நெல் விளையவில்லை. உழைத்து சம்பாதித்த எல்லா சாதி மக்களின் வரிப்பணத்தில் மாமன்னர்கள் கோயில்களை, கோட்டைகளை, ஏரிகளை கட்டினார்கள். காடுகளை சீரமைத்து நிலங்களை வயல்களாக்கினார்கள். 

உழைப்பில் விளைந்த காசும், கட்டுமானங்களைக் கட்டிய உழைப்பும் மண்ணின் எல்லா மக்களுக்கும் சொந்தம். உழைக்காமலேயே பிறப்பின் அடிப்படையிலேயே அதெப்படி சில சாதிகள் மட்டும் கோயிலை-கோட்டையை -நிலத்தை-அதிகாரத்தை சொந்தம் கொண்டாடிவிட முடியும் என்று கேள்வி கேட்பதும், அதையொட்டிய கதையாடல்களுமே ஈராயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழ்த் தலைமுறைக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அரசியல் பார்வை. 

அரண்மனையும் அந்தப்புரமும் மட்டுமே தமிழ்நாட்டின் வரலாறு இல்லை என்பதை உணர்ந்த படைப்பாளிகளுக்காக தமிழ்நாடு நீண்டகாலமாக காத்திருக்கிறது.  ஒரு படைப்பு பிரம்மாண்டத்திற்காக அல்ல, அதன் அரசியலுக்காக கொண்டாடப்பட வேண்டும் என விரும்புகிறேன்.

அரசியலை சரியாகப் பேசும் படங்களின் பிரம்மாண்டம் வரலாற்றில் நிற்கும். வரலாற்றை உருவாக்கும். பிரம்மாண்டம் என்பது தயாரிக்கும் செலவில் இல்லை. மண்ணின் வரலாற்றை சரியாகப் புரிந்து கொண்ட வரவில் இருக்கிறது. நினைவில் வைப்போம்.

‘புதினம் ஒருபோதும் வரலாறு இல்லை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார் இந்த கருத்தை சொன்னதும் போதும் வாங்கி கட்டி வருகிறார் நெல்சன், தமிழ் மன்னர்களின் வரலாற்றை பற்றி படம் எடுத்து அதில் அவர்களை நெற்றியில் திருநீறு உடன் காட்டினால் போதுமே வெங்காயத்தின் நான்காம் லேயருக்கு கோபம் வந்து விடுமே என பதிலடி கொடுத்து வருகின்றனர் தமிழர்கள்.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து தற்போது இந்து லாபிக்கு எதிரான சிலர் கதறுவதை பார்க்கும் போது திரைப்படம் உண்மையில் நன்றாக இருக்குமோ நானும் பார்க்க போகிறேன் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.